ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் மனு

Added : ஆக 25, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி-பிச்சைகவுண்டன் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி, வடிகால் வாய்க்காலை சீரமைத்து, விவசாய பாசனத்திற்கு ஏரி தண்ணீரை பயன்படுத்த வழிவகை செய்யக்கோரி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.ஈருடையாம்பட்டு அடுத்த மங்கலம் காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனு:சாத்தனுார் அணையில் இருந்து வரும் நீரை பிச்சைகவுண்டன் ஏரியில் சேமித்து



கள்ளக்குறிச்சி-பிச்சைகவுண்டன் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி, வடிகால் வாய்க்காலை சீரமைத்து, விவசாய பாசனத்திற்கு ஏரி தண்ணீரை பயன்படுத்த வழிவகை செய்யக்கோரி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.ஈருடையாம்பட்டு அடுத்த மங்கலம் காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனு:சாத்தனுார் அணையில் இருந்து வரும் நீரை பிச்சைகவுண்டன் ஏரியில் சேமித்து குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துகிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரி பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பில் உள்ளது.மேலும், முட்புதர்கள் வளர்ந்திருப்பதால் தண்ணீரை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. இதனால் தண்ணீர் நிலத்தில் தேங்கி பயிர்கள் மூழ்கி வீணாகிறது.மேலும், ஈருடையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர் ஏரியை தங்கள் விருப்பத்திற்கு மீன் குத்தகைக்கு ஏலம் விடுகின்றனர். குத்தகைதாரர்கள் மீன் வளர்ப்பிற்காக சர்க்கரை ஆலை கழிவு, இறைச்சிக் கழிவுகளை தண்ணீரில் வீசுவதால் குடிநீர் மாசடைவதுடன், அந்த தண்ணீரை அருந்தும் கால்நடைகள் பாதிக்கப்படுகிறது.இதனால், ஏரியைச் சுற்றியுள்ள விளை நிலங்களில் சம்பு என்ற புல்வகை முளைவதால் பயிர் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பிச்சைகவுண்டன் ஏரியை ஆய்வு செய்து, நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றிட வேண்டும். மேலும், வடிகால் வாய்க்காலை சீரமைத்திடவும், ஏரியை மீன் குத்தகைக்கு விடாமல், தண்ணீரை பாசனத்திற்கு மட்டும் பயன்படுத்தவும் வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X