கொடைக்கானல் ஏரியில் பணிகள் தடை கோரிய வழக்கு தள்ளுபடி

Added : ஆக 25, 2022 | |
Advertisement
மதுரை:கொடைக்கானல் ஏரியைச் சுற்றி, மேம்பாட்டு பணிக்கு தடை கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்த ஆறுமுக வேலன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:கொடைக்கானல் ஏரியை சுற்றிலும், தடை செய்யப் பட்ட பகுதியில், உரிய அனுமதியின்றி, நகராட்சி தரப்பில் கட்டுமானம் மேற்கொள்ளப் படுகிறது. இதனால் ஏரி

மதுரை:கொடைக்கானல் ஏரியைச் சுற்றி, மேம்பாட்டு பணிக்கு தடை கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்த ஆறுமுக வேலன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:கொடைக்கானல் ஏரியை சுற்றிலும், தடை செய்யப் பட்ட பகுதியில், உரிய அனுமதியின்றி, நகராட்சி தரப்பில் கட்டுமானம் மேற்கொள்ளப் படுகிறது.
இதனால் ஏரி மாசுபடும்.ஏரியை பாதுகாக்க வேண்டிய கொடைக்கானல் நகராட்சி நிர்வாகமே, அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கட்டுமானத்திற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார்.
வழக்கை, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு விசாரித்தது. கொடைக்கானல் நகராட்சி தரப்பில் கூறப்பட்டதாவது:ஏரியில் சிலர் பிளாஸ்டிக் பாட்டில்கள், கழிவுகளை வீசுகின்றனர். இதை தடுக்க, சுற்றிலும் வேலி அமைக்கப்படுகிறது. ஏற்கனவே இருந்த கழிப்பறையை அகற்றி, அங்கு கூடுதலாக ஒரு கழிப்பறை அமைக்கப்படும்.
தமிழக அரசின் தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டு, டெண்டர் நடத்தி பணி மேற்கொள்ளப்படுகிறது. உள்நோக்கத்தில் மனுதாரர் மனு செய்துள்ளார்.இவ்வாறு கூறப்பட்டது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'சுற்றுலா பயணியரை கவரும் நோக்கில், ஏரியை சுற்றிலும் மேம்பாட்டு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு தடை விதித்து உத்தரவிட முடியாது; மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X