முதியவரை தாக்கி பணம் பறிப்பு| Dinamalar

முதியவரை தாக்கி பணம் பறிப்பு

Added : ஆக 25, 2022 | |
காஞ்சிபுரம்:திருவண்ணாமலை மாவட்டம், திருப்பனங்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர், 64; நேற்று முன்தினம் காஞ்சிபுரத்திற்கு வந்தவர் மீண்டும் ஊருக்கு தன் இரு சக்கர வாகனத்தில் சென்றார். காஞ்சிபுரம் அடுத்த புஞ்சையரசந்தாங்கள் அருகே செல்லும் போது மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை மடக்கி பணம், மொபைல்போன் பறிக்க முற்பட்டனர். அவர் தர மறுத்ததால் கையில் வைத்திருந்த கத்தியால்

காஞ்சிபுரம்:திருவண்ணாமலை மாவட்டம், திருப்பனங்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர், 64; நேற்று முன்தினம் காஞ்சிபுரத்திற்கு வந்தவர் மீண்டும் ஊருக்கு தன் இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

காஞ்சிபுரம் அடுத்த புஞ்சையரசந்தாங்கள் அருகே செல்லும் போது மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை மடக்கி பணம், மொபைல்போன் பறிக்க முற்பட்டனர். அவர் தர மறுத்ததால் கையில் வைத்திருந்த கத்தியால் அவர் தலை கைகளில் வெட்டி 2,000 ரூபாய், மொபைல் போனை பறித்து அங்கிருந்து தப்பினர்.பின் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரில் காஞ்சி தாலுகா போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X