சாத்தான்குளம் வழக்கு விசாரணை நிலை என்ன?:அறிக்கை கேட்கிறது உயர் நீதிமன்றம்

Added : ஆக 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மதுரை:சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, கீழமை நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார், 2020 ஜூன், 19ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். கோவில்பட்டி கிளை சிறையில் இருவரும்

மதுரை:சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, கீழமை நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார், 2020 ஜூன், 19ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். கோவில்பட்டி கிளை சிறையில் இருவரும் இறந்தனர்.சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், ஏட்டுக்கள் முருகன், சாமத்துரை, போலீஸ்காரர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது சி.பி.ஐ., கொலை வழக்கு பதிந்தது.ஜெயராஜ் மனைவி செல்வராணி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ள போலீசார் செல்வாக்குமிக்கவர்கள். சாட்சிகளை மிரட்ட வாய்ப்புள்ளது. இது விசாரணையை பாதிக்கும். மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையை விரைவுபடுத்தி, குறிப்பிட்ட கால வரம்பு நிர்ணயித்து முடிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி கே.முரளிசங்கர் விசாரித்தார்.சி.பி.ஐ., தரப்பில், 'இதுவரை, 40 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது. துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எங்கள் தரப்பில் எவ்வித தாமதமும் இல்லை' என, தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி, 'கீழமை நீதிமன்றம் விசாரணையை முடிக்க இந்நீதிமன்றம் ஏற்கனவே கால நீட்டிப்பு வழங்கியது. 'தற்போது மீண்டும் கால நீட்டிப்பு கோரி, கீழமை நீதிமன்றத்திலிருந்து கடிதம் வந்துள்ளது. விசாரணையின் தற்போதைய நிலை குறித்து கீழமை நீதிமன்றம் தரப்பில் ஆக., 29ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
26-ஆக-202203:18:17 IST Report Abuse
John Miller எஜமான், அப்படியே கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் விஜயபாஸ்கர் குட்கா வழக்கையும், சகாயம் சார் விசாரித்த க்ரானைட் வழக்கையும் கொஞ்சம் எழுப்பிவிடுங்கள் சாமி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X