தொழிலாளிக்குரூ.9 லட்சம் வருமானமாம்!

Added : ஆக 26, 2022 | |
Advertisement
உளுந்துார்பேட்டை:கூலித் தொழிலாளிக்கு ஆண்டு வருமானம், 9 லட்சம் ரூபாய் என சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பாலி புது காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 45; விவசாய கூலி தொழிலாளி.கடனுதவி பெற, உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் வருமான சான்றிதழ் கேட்டு, சில தினங்களுக்கு முன்

உளுந்துார்பேட்டை:கூலித் தொழிலாளிக்கு ஆண்டு வருமானம், 9 லட்சம் ரூபாய் என சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பாலி புது காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 45; விவசாய கூலி தொழிலாளி.கடனுதவி பெற, உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் வருமான சான்றிதழ் கேட்டு, சில தினங்களுக்கு முன் விண்ணப்பித்தார்.
கடந்த, 23ம் தேதி இவருக்கு வருமான சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில், அவருக்கு ஆண்டு வருமானம், 9 லட்சம் ரூபாய் என இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.இதனால், கடனுதவி பெற முடியாது என்பதால் கவலை அடைந்துள்ளார். இந்த சான்றிதழ் விபரம் குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X