கோதுமை மாவு ஏற்றுமதிக்கு மத்திய அரசுகட்டுப்பாடு!

Updated : ஆக 26, 2022 | Added : ஆக 26, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி,-உள்நாட்டில் கோதுமை மாவு விலை உயர்வை கட்டுப்படுத்தவும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திலும், கோதுமை மாவு ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி,-உள்நாட்டில் கோதுமை மாவு விலை உயர்வை கட்டுப்படுத்தவும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திலும், கோதுமை மாவு ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.



latest tamil news



பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள், கோதுமை ஏற்றுமதியில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கின்றன. உலகம் முழுதும் நடக்கும் கோதுமை வர்த்தகத்தில் இந்த இரு நாடுகளும் நான்கில் ஒரு பங்கு வகிக்கின்றன.

ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கியது முதல், கோதுமை ஏற்றுமதி தடைபட்டது. இதனால், பல்வேறு நாடுகளிலும் கோதுமையின் தேவை அதிகரித்தது. இது, இந்திய கோதுமைக்கு சர்வதேச சந்தையில் மிகப் பெரிய கிராக்கியை உருவாக்கியது. கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டதால், உள்நாட்டில் அதன் விலை உயரத் துவங்கியது.இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தவும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த மே மாதம் தடை விதித்தது.

இதன் காரணமாக, பல்வேறு நாடுகளிலும் கோதுமை மாவின் தேவை பல மடங்காக உயர்ந்தது.இதன் விளைவாக, நடப்பாண்டு ஏப்., - ஜூலை மாதங்களில் நம் நாட்டில் இருந்து நடக்கும் கோதுமை ஏற்றுமதி 200 மடங்காக உயர்ந்தது.இந்த மூன்று மாதங்களில் மட்டும், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோதுமை மாவை நம் நாடு ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 2021 - 22 நிதியாண்டில் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோதுமை மாவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கோதுமை மாவு ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் உயர்வு, உள்நாட்டு சந்தையை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலை, முன் எப்போதும் இல்லாத அளவு உயரத் துவங்கியது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. அதில், கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டது.முன்னதாக, கோதுமை மாவின் ஏற்றுமதிக்கு தடை அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது என்ற கொள்கையை மத்திய அரசு வகுத்திருந்தது.


latest tamil news


ஆனால், தற்போதைய விலை உயர்வை கட்டுப்படுத்தவும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், அந்த கொள்கையில் சில மாற்றங்கள் செய்து, கட்டுப்பாடுகளை அமல்படுத்த கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, 'கோதுமை மாவு ஏற்றுமதியில் தடை ஏதும் இருக்காது. ஆனால், ஏற்றுமதி தொடர்பான அமைச்சகங்களின் குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே ஏற்றுமதி தொடரும்' என, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் விரைவில் வெளியிட உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
26-ஆக-202200:17:58 IST Report Abuse
Fastrack இந்தியாவில் கோதுமை அரிசி மற்றும் சோளம் கம்பு கேழ்வரகு போன்ற நவதானியங்களை பழக்கப்படுத்தி கொள்வது நல்லது ..ஐம்பது சதவிகிதம் ஏற்றுமதி செய்ய அனுமதித்தால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X