எம்.எல்.ஏ.,க்களுக்கு ரூ.800 கோடி பேரம்: ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அலறல்

Added : ஆக 26, 2022 | |
Advertisement
புதுடில்லி-''ஆம் ஆத்மியிலிருந்து 40 எம்.எல்.ஏ.,க்களை இழுத்து ஆட்சியை கவிழ்க்க, பா.ஜ., தரப்பில் 800 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டுள்ளது. ஆனாலும், ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை,'' என, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மணீஷ் சிசோடியா துணை முதல்வராக
எம்.எல்.ஏ.,க்களுக்கு ரூ.800 கோடி பேரம்: ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அலறல்

புதுடில்லி-''ஆம் ஆத்மியிலிருந்து 40 எம்.எல்.ஏ.,க்களை இழுத்து ஆட்சியை கவிழ்க்க, பா.ஜ., தரப்பில் 800 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டுள்ளது. ஆனாலும், ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை,'' என, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மணீஷ் சிசோடியா துணை முதல்வராக உள்ளார். சி.பி.ஐ., சோதனைடில்லியில் மதுபான விற்பனை உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக கூறி, மணீஷ் சிசோடியா வீட்டில் சமீபத்தில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது. இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா, முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க, பா.ஜ., தலைவர்கள் பேரம் பேசி வருவதாக கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோர் குற்றச்சாட்டுகளை கூறினர்.ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களிடம் பேரம் பேசப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களின் கூட்டம் நேற்று டில்லியில் காலை நடந்தது.

இதில், பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.இதன்பின், டில்லியில் உள்ள காந்தி நினைவிடத்துக்கு எம்.எல்.ஏ.,க்களுடன் சென்று, கெஜ்ரிவால் அஞ்சலி செலுத்தினார். தோல்விஇதன்பின் அவர் கூறியதாவது:டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க, எங்கள் கட்சியின் 40 எம்.எல்.ஏ.,க்களுக்கு, தலா 20 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசப்பட்டுள்ளது. இந்த பேரத்துக்கு உடன்பட மறுத்தால், சிசோடியா போல் வழக்கில் சிக்க நேரிடும் என்றும் மிரட்டிஉள்ளனர். ஒட்டு மொத்தமாக 800 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டுள்ளது. இந்த தொகை, பா.ஜ.,வினருக்கு எப்படி வந்தது என தெரியவில்லை.

பா.ஜ.,வின் பேரத்துக்கு ஒரு எம்.எல்.ஏ., கூட உடன்படவில்லை. எங்கள் கட்சியைச் சேர்ந்த, 62 எம்.எல்.ஏ.,க்களும் எங்களுடன் தான் உள்ளனர். அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்கும், 'ஆப்பரேஷன் லோட்டஸ்' திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, ஆலோசனை கூட்டத்தில் 53 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே பங்கேற்றதாகவும், சிலரை காணவில்லை என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதனால், டில்லி அரசியலில் பரபரப்புஏற்பட்டுள்ளது.துாய்மைப்படுத்த வேண்டும்!


ஊழல் கறைபடிந்த ஆம் ஆத்மி தலைவர்கள் காந்தி நினைவிடத்துக்குச் சென்றதால், அந்த இடம் மாசு அடைந்துள்ளது. எனவே, கங்கை நீரால் அந்த இடத்தை துாய்மைப்படுத்த வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பேரம், ஆட்சி என மக்களின் கவனத்தை திசை திருப்ப நாடகமாடுகின்றனர். சுதான்ஷு திரிவேதிசெய்தி தொடர்பாளர், பா.ஜ.,

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X