கொலை வழக்கில் ஜாமினில் வந்தகாங்., கவுன்சிலருக்கு பாலாபிஷேகம்

Added : ஆக 26, 2022 | |
Advertisement
இந்துார்-மத்திய பிரதேசத்தில் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த காங்., கவுன்சிலருக்கு, சிறைவாசலில் அவரது ஆதரவாளர்கள் 'டிரம்ஸ்' இசைத்து, பாலாபிஷேகம் செய்து வரவேற்பளித்தனர். மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள இந்துார் மாநகராட்சி கவுன்சிலர் ராஜு பதோரியா காங்கிரசை சேர்ந்தவர். கவுன்சிலர் தேர்தலில் இவரை

இந்துார்-மத்திய பிரதேசத்தில் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த காங்., கவுன்சிலருக்கு, சிறைவாசலில் அவரது ஆதரவாளர்கள் 'டிரம்ஸ்' இசைத்து, பாலாபிஷேகம் செய்து வரவேற்பளித்தனர்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள இந்துார் மாநகராட்சி கவுன்சிலர் ராஜு பதோரியா காங்கிரசை சேர்ந்தவர். கவுன்சிலர் தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.,வைச் சேர்ந்த சந்துராவ் ஷிண்டே என்பவர் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ராஜு பதோரியா ஜூலையில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்துார் சிறையில் இருந்து அவர் வெளியில் வந்ததும், அவரது ஆதர வாளர்கள் பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.வழி நெடுகிலும் டிரம்ஸ் இசைத்து, பட்டாசு வெடித்து, ஆடிப்பாடி அவரை வரவேற்றனர்.

அப்போது, பதோரியாவுக்கு சிலர் பாலாபிஷேகமும் செய்தனர். இதற்கு, பா.ஜ.,வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.கொலை வழக்கில் சிக்கி சிறைக்கு போனவருக்கு, இப்படி ஆடம்பர வரவேற்பு கொடுப்பது, மிகவும் மோசமான முன் உதாரணமாக உள்ளது என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X