'அக்னிபத்' திட்டத்துக்குதடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

Added : ஆக 26, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி-முப்படைகளில் பணியில் சேருவதற்கான, 'அக்னிபத்' திட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த டில்லி உயர் நீதிமன்றம், இது தொடர்பான மனுக்கள் மீது நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ராணுவம், விமானம் மற்றும் கடற்படைகளில் பணியில் சேருவதற்கான அக்னிபத் என்ற புதிய திட்டத்தை, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இத்திட்டத்தின்படி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-முப்படைகளில் பணியில் சேருவதற்கான, 'அக்னிபத்' திட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த டில்லி உயர் நீதிமன்றம், இது தொடர்பான மனுக்கள் மீது நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.



latest tamil news


ராணுவம், விமானம் மற்றும் கடற்படைகளில் பணியில் சேருவதற்கான அக்னிபத் என்ற புதிய திட்டத்தை, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இத்திட்டத்தின்படி, 'பதினேழரை வயது முதல் 23 வயது வரையிலான இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, முப்படைகளில் நான்காண்டு பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.'அதன் பின், 25 சதவீத வீரர்கள் மேலும் 15 ஆண்டுகள் பணியில் தொடர வாய்ப்பு வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது.

இத்திட்டத்துக்கு, பல்வேறு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் வெடித்து கலவரம் ஏற்பட்டது. திட்டத்திற்கு தடை விதிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து மனுக்களையும் டில்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மனுக்கள், டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:அக்னிபத் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது, ஒருங்கிணைந்த பதில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்.


latest tamil news


மேலும், பணி நியமன நடைமுறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது தனித்தனியாகவும் பதில் அளிக்க வேண்டும். இந்த பதில் மனுவை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.அதுவரை அக்னிபத் திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. அரசு பதில் அளித்த பிறகு விசாரணை தொடரும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஆக-202212:28:36 IST Report Abuse
வேங்கடசுப்பிரமணியன் அக்னிப் திட்டத்திற்கு சில மாநிலங்களில் மட்டுமே போராட்டம்( அதுவும் தூண்டிவிட்டதாக கூறப்படுகிறது) நடந்தது. தாங்கள் பல்வேறு மாநிலங்களில் என்று கூறுகிறீர்களே
Rate this:
Cancel
26-ஆக-202208:47:01 IST Report Abuse
அப்புசாமி இதே திட்டத்தை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் விரிவு படுத்தலாமே. எல்லோருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இவிங்களை எப்போது வேண்டுமானாலும் திருப்பி அழைத்துக் கொள்ளலாம். இளம் அதிகாரிகள் துடிப்புடன் பணியாற்றுவார்கள். மந்திரி பதவிக்கு மட்டும் கெழ போல்ட்டுகள் கடைசி வரை பதவியில் இருக்கலாம்.
Rate this:
Cancel
26-ஆக-202208:43:45 IST Report Abuse
அப்புசாமி இதே மாதிரி நீதிபதிகளையும் நாலு வருஷத்துக்கு நியமிக்கணும். பிறகு 10 லட்சம் குடுத்து அனுப்பி விடலாம். பிறகு தேவைப்பட்டால் மீண்டும் அழைத்துக் கொள்ளலாம். நாட்டுக்கு செலவு மிச்சமாகும். புதிய இளம் நீதிபதிகள் வருவாங்க. நல்ல தீர்ப்புகளை ஒத்தி வைக்காமல் குடுப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X