ராமநாதபுரம் ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

Updated : ஆக 26, 2022 | Added : ஆக 26, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை----ஆசிரியர் தினத்தையொட்டி, தமிழகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், நேர்காணலில் 'நமஸ்தே' என ஹிந்தியில் உரையாடியவர். முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5, தேசிய அளவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, மத்திய அரசின் சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது; தமிழகத்தில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை----ஆசிரியர் தினத்தையொட்டி, தமிழகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், நேர்காணலில் 'நமஸ்தே' என ஹிந்தியில் உரையாடியவர்.latest tamil news
முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5, தேசிய அளவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, மத்திய அரசின் சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது; தமிழகத்தில் மாநில அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் வழங்கப்படுகிறது.இந்த ஆண்டு தேசிய விருதுக்கு, மத்திய கல்வித்துறை சார்பில், 'ஆன்லைன்' வழியே விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விருதுக்கு விண்ணப்பித்தவர்களின் விபரங்களை விசாரித்த பள்ளிக் கல்வித்துறை, ஆறு பேரை மட்டும் மத்திய கல்வித்துறைக்கு பரிந்துரைத்தது.

ஆறு ஆசிரியர்களிடமும், இம்மாதம் முதல் வாரத்தில், டில்லியில் உள்ள கல்வித் துறை அதிகாரிகள் குழு, ஆன்லைனில் நேர்காணல் நடத்தியது. நேர்காணல் மற்றும் ஆசிரியர்களின் பணி விபரங்கள் அடிப்படையில், தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், தமிழகத்தில் இருந்து ராமச்சந்திரன் என்ற ஆசிரியர் மட்டும் தேர்வானார்.ராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பல் பஞ்சாயத்து ஒன்றிய துவக்கப் பள்ளி ஆசிரியராக ராமச்சந்திரன் பணியாற்றுகிறார்.

தினமும் தாமதமின்றி பணிக்கு வருவது, மாணவர்களுக்கு நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பாடம் நடத்துவது, நல்லொழுக்க வகுப்புகளை நடத்துவது என சிறப்பாக செயல்பட்டவர். தேசிய விருதுக்கு, நேர்காணல் நடத்திய டில்லி அதிகாரிகளிடம், 'நமஸ்தே, வணக்கம்' என கூறியுள்ளார். பின், அவர்களின் கேள்விகளுக்கு, தனக்கு தெரிந்த ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பதில் அளித்துள்ளார். இவரது பணிகள் மற்றும் பன்மொழி திறனுக்கு சான்றாக, தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


latest tamil newsபின்தங்கிய தமிழகம்

நாடு முழுதும் 46 பேருக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ஹிமாச்சல், பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீஹார், தெலுங்கானா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும், சி.பி.எஸ்.இ., மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், தலா இரண்டு விருதுகள் பெற்றுள்ளன. அந்தமான், உத்தரகண்ட் மாநிலங்கள், மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கான விருதை பெற்றுள்ளன.புதுச்சேரி, ஆந்திரா, அசாம், திரிபுரா, மேகாலயா, சிக்கிம், மணிப்பூர், நாகாலாந்து, கர்நாடகா, உ.பி., லடாக், காஷ்மீர், மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர், குஜராத், கோவா, உத்தரகண்ட், டில்லி, சண்டிகர், ஹரியானா ஆகிய மாநிலங்களும், ஐ.சி.எஸ்.இ., நவோதயா வித்யாலயா, ஏகலைவா பள்ளிகளும், தலா ஒரு விருது பெற்றுள்ளன.தமிழகத்தில் கடந்த ஆண்டும், அதற்கு முன்பும் தலா இரண்டு ஆசிரியர்கள் விருது பெற்ற நிலையில், இந்த ஆண்டு விருது பெறுவோர் எண்ணிக்கை ஒன்றாக குறைந்துள்ளது.தமிழக பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள், சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான தேசிய விருதும் குறைந்திருப்பது, ஆசிரியர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாடு முழுதும் 46 பேருக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ஹிமாச்சல், பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீஹார், தெலுங்கானா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும், சி.பி.எஸ்.இ., மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், தலா இரண்டு விருதுகள் பெற்றுள்ளன. அந்தமான், உத்தரகண்ட் மாநிலங்கள், மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கான விருதை பெற்றுள்ளன.புதுச்சேரி, ஆந்திரா, அசாம், திரிபுரா, மேகாலயா, சிக்கிம், மணிப்பூர், நாகாலாந்து, கர்நாடகா, உ.பி., லடாக், காஷ்மீர், மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர், குஜராத், கோவா, உத்தரகண்ட், டில்லி, சண்டிகர், ஹரியானா ஆகிய மாநிலங்களும், ஐ.சி.எஸ்.இ., நவோதயா வித்யாலயா, ஏகலைவா பள்ளிகளும், தலா ஒரு விருது பெற்றுள்ளன.தமிழகத்தில் கடந்த ஆண்டும், அதற்கு முன்பும் தலா இரண்டு ஆசிரியர்கள் விருது பெற்ற நிலையில், இந்த ஆண்டு விருது பெறுவோர் எண்ணிக்கை ஒன்றாக குறைந்துள்ளது.தமிழக பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள், சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான தேசிய விருதும் குறைந்திருப்பது, ஆசிரியர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
26-ஆக-202211:27:48 IST Report Abuse
Sampath Kumar நமஸ்தே சொன்னால் விருது உறுதி புரிஞ்சுடயலா ஆசிரியர்களே
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
26-ஆக-202211:04:39 IST Report Abuse
raja அரசு ஆசிரியர்களை விட மிக சிறந்த நல்லாசிரியர் தனியார் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கொத்தடிமையாக வேலை செய்கிறார்கள் வேலை என்பதை விட இவர்கள் தான் உண்மையாக சேவை செய்கிறார்கள் என்று சொல்லவேண்டும்......
Rate this:
Cancel
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
26-ஆக-202208:47:09 IST Report Abuse
T.Senthilsigamani Congratulations. He knows Hindi very well. But he can't able to take the Hindi classes for his school students. If taken he will be considered as enemy to the Tamil language in the government schools.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X