கஞ்சா கடத்திய பெண்ணுக்கு10 ஆண்டு சிறை

Added : ஆக 26, 2022 | |
Advertisement
கோவை:கஞ்சா கடத்திய வழக்கில், ஈரோட்டை சேர்ந்த பெண்ணுக்கு, 10 ஆண்டு சிறை, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.ஈரோடு அருகேயுள்ள பள்ளபாளையம், சுதானந்த நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி பூங்கோதை, 46. இவர் கஞ்சா கடத்தி விற்பதாக, கோவை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் வந்தது.அதன் படி, 2020, செப்., 8ல், ஈரோடு, வீரப்பன்
கஞ்சா கடத்திய பெண்ணுக்கு10 ஆண்டு சிறை

கோவை:கஞ்சா கடத்திய வழக்கில், ஈரோட்டை சேர்ந்த பெண்ணுக்கு, 10 ஆண்டு சிறை, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
ஈரோடு அருகேயுள்ள பள்ளபாளையம், சுதானந்த நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி பூங்கோதை, 46. இவர் கஞ்சா கடத்தி விற்பதாக, கோவை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன் படி, 2020, செப்., 8ல், ஈரோடு, வீரப்பன் சத்திரம் அருகே ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்த பூங்கோதையை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, 16 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. பூங்கோதையை கைது செய்து, கோவை இ.சி., கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் விசாரணை முடிந்ததை தொடர்ந்து, நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.குற்றம் சாட்டப்பட்ட பூங்கோதைக்கு, 10 ஆண்டு சிறை, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி லோகேஸ்வரன் தீர்ப்பளித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X