எரித்துக் கொல்லப்பட்டவர் யார்; மாயமான நான்கு பேர் எங்கே: திருப்பூரில் பூட்டிய வீட்டில் 'திக் திக்'

Added : ஆக 26, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் வீட்டிற்குள் கொன்று புதைக்கப்பட்ட சடலத்தை எடுத்துச் சென்று எரித்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் வீட்டில் வசித்த நான்கு பேர் மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருப்பூர் அடுத்த பொங்குபாளையத்தில் உள்ள காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.
எரித்துக் கொல்லப்பட்டவர் யார்; மாயமான நான்கு பேர் எங்கே: திருப்பூரில் பூட்டிய வீட்டில் 'திக் திக்'

திருப்பூர்:திருப்பூரில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் வீட்டிற்குள் கொன்று புதைக்கப்பட்ட சடலத்தை எடுத்துச் சென்று எரித்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் வீட்டில் வசித்த நான்கு பேர் மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் அடுத்த பொங்குபாளையத்தில் உள்ள காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. வேலம்பாளையம் போலீசார் விசாரித்தனர்.'சிசிடிவி' கேமராவில் டூ வீலரில் ஒருவர் சடலத்தை மூட்டையாக கட்டிக் கொண்டு வந்ததும் அங்கிருந்து 2 கி.மீ. துாரத்தில் உள்ள அண்ணா நகர் தியாகி குமரன் காலனி வீதிகளில் மூட்டையுடன் டூ வீலரில் ஒருவர் சென்றதும் கண்டறியப்பட்டது.
அண்ணா நகர் தியாகி குமரன் காலனி வீதிகளில் போலீசார் கண்காணித்த போது அப் பகுதியில் தனியாக இருந்த ஓட்டு வீடு அருகே நாய் குரைத்துக் கொண்டிருந்தது. வீட்டில் ஐந்து பேர் வசித்து வந்துள்ளனர்; இரு நாட்களாக யாரும் இல்லை என தெரியவந்தது.வீட்டின் உரிமையாளர் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ. சக்திவேல்.
அவரை அழைத்துக் கொண்டு பூட்டியிருந்த வீட்டிற்கு சென்ற போது கடும் துர்நாற்றம் வீசியது.போலீஸ் கமிஷனர் பிரபாகரன் துணை கமிஷனர் அபினவ்குமார் மற்றும் போலீசார் வீட்டை திறந்து பார்த்த போது வீட்டுக்குள் குழி தோண்டி மூடப்பட்டிருந்தது.ஆர்.டி.ஓ. பண்டரிநாதன் மற்றும் வடக்கு தாசில்தார் கனகராஜ் முன்னிலையில் மாலை 5:00 மணியளவில் குழி தோண்டும் பணி துவங்கியது. தோண்ட தோண்ட கடும் துர்நாற்றம் வீசியது. நான்கு மணி நேரமாக தோண்டப்பட்ட குழிக்குள் உள்ளங்கையின் மேற்புற தோல் மற்றும் அலைபேசி மட்டும் சிக்கியது.
போலீசார் கூறியதாவது:வீட்டில் சிவகாசியைச் சேர்ந்த மணிகண்டன் 36, அபிராமி 28, சத்யா 8, மகேஸ்வரி 10 மற்றும் அபிராமியின் தாய் பஞ்சவர்ணம் 48 ஆகியோர் இருந்தனர். நான்கு மாதங்கள் முன் இந்த வீட்டுக்கு வந்துள்ளனர்.
மணிகண்டன் பழைய பொருட்களை பெற்று பிளாஸ்டிக் பொருட்களை தள்ளுவண்டியில் விற்று வந்தார்.முதல் கணவரான பரமசிவம் என்பவரை விட்டு அபிராமி குழந்தைகளுடன் மணிகண்டனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.கடந்த 20ம் தேதி முதல் இரு குழந்தைகளையும் அபிராமியையும் அக்கம்பக்கத்தினர் பார்க்கவில்லை என கூறுகின்றனர். கடந்த 24ம் தேதி காலை பஞ்சவர்ணம் வெளியே கிளம்பி சென்றவர் வீடு திரும்பவில்லை.
அபிராமியின் முதல் கணவரான பரமசிவம் கடந்த ஆண்டு மனைவி குழந்தைகளை காண வில்லை என சிவகாசி போலீசில் புகார் அளித்துள்ளார். ஒருவேளை திருப்பூரில் இருப்பதை தெரிந்து கொண்டு தகராறு செய்திருக்கலாம்.இதில் ஏற்பட்ட பிரச்னையில் பரமசிவமோ மணிகண்டனோ கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சடலத்தை வீட்டுக்குள் புதைத்து வைத்திருக்க வேண்டும். துர்நாற்றம் வீச துவங்கியதும் தோண்டி எடுத்து டூ வீலரில் எடுத்துச் சென்று எரித்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X