கிணற்றில் வீசப்பட்ட ரவுடிஎலும்புக்கூடாக உடல் மீட்பு

Added : ஆக 26, 2022 | |
Advertisement
குன்றத்துார்:குன்றத்துார் அருகே, 10 மாதங்களுக்கு முன் கிணற்றில் வீசப்பட்ட ரவுடி உடல், எலும்புக்கூடாக மீட்கப்பட்டது. அங்கேயே பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.குன்றத்துாரை அடுத்த எருமையூரை சேர்ந்தவர், பிரகாஷ், 25. இவர் மீது கொலை வழக்கு உள்ளது. திருமுடிவாக்கத்தில் உள்ள டீ கடை மற்றும் ஹோட்டல்களில் மாமூல் வாங்குவதில், பிரகாசுக்கும்,

குன்றத்துார்:குன்றத்துார் அருகே, 10 மாதங்களுக்கு முன் கிணற்றில் வீசப்பட்ட ரவுடி உடல், எலும்புக்கூடாக மீட்கப்பட்டது. அங்கேயே பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

குன்றத்துாரை அடுத்த எருமையூரை சேர்ந்தவர், பிரகாஷ், 25. இவர் மீது கொலை வழக்கு உள்ளது. திருமுடிவாக்கத்தில் உள்ள டீ கடை மற்றும் ஹோட்டல்களில் மாமூல் வாங்குவதில், பிரகாசுக்கும், திருமுடிவாக்கத்தை சேர்ந்த கருப்பு, 28, என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.கஞ்சா போதைக்கு அடிமையான பிரகாஷ், கூட்டாளிகளுடன் சேர்ந்து கருப்பை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

இதையறிந்த கருப்பு, தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, கடந்தாண்டு நவம்பரில் மறைமலை நகருக்கு சென்ற பிரகாஷை, துாக்கிச் சென்று, சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். பின், சாக்கு மூட்டையில் கட்டி, திருமுடிவாக்கத்திற்கு எடுத்து வந்து, பாழடைந்த கிணற்றில் உடலை வீசியுள்ளனர்.போலீஸ் விசாரணையில் இது தெரியவந்ததை அடுத்து, பாழடைந்த கிணற்றில் தண்ணீரை உறிஞ்சி எடுத்து, உடலை தேடும் பணியில், நேற்று முன்தினம், குன்றத்துார் போலீசார் ஈடுபட்டனர்.

உடலை கண்டுபிடிக்க முடியாததால், இரண்டாம் நாளாக பணி தொடர்ந்தது. நேற்று காலை, 11:45 மணிக்கு சாக்கு மூட்டையில் எலும்புக் கூட இருந்த பிரகாஷின் உடலை மீட்டனர். தொடர்ந்து, அங்கேயே வருவாய் துறையினர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மறைமலை நகர் காவல் நிலையத்தில் பிரகாஷ் மாயமானதாக வழக்கு பதிவாகியுள்ளதால், இந்த வழக்கு, மறைமலை நகர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X