வீட்டு வசதி வாரிய இடத்தில் வசிப்போருக்கு பட்டா வழங்குங்கள்

Added : ஆக 26, 2022 | |
Advertisement
புதுச்சேரி-லாஸ்பேட்டை நெருப்புக்குழி பகுதியில் வீட்டு வசதி வாரிய இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வைத்தியநாதன் எம்.எல்.ஏ., (காங்.,) பேசினார்.சட்டசபையில் நேற்று பூஜ்ய நேரத்தில் அவர் பேசியதாவது: என்னுடைய லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட நெருப்புகுழி பகுதியில் வீட்டு வசதி வாரியத்தின் இடத்தில் நீண்ட காலமாக வசிக்கும் மக்களுக்கு இதுவரை பட்டா



புதுச்சேரி-லாஸ்பேட்டை நெருப்புக்குழி பகுதியில் வீட்டு வசதி வாரிய இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வைத்தியநாதன் எம்.எல்.ஏ., (காங்.,) பேசினார்.சட்டசபையில் நேற்று பூஜ்ய நேரத்தில் அவர் பேசியதாவது: என்னுடைய லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட நெருப்புகுழி பகுதியில் வீட்டு வசதி வாரியத்தின் இடத்தில் நீண்ட காலமாக வசிக்கும் மக்களுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை.கடந்த 2011-16 காலக்கட்டத்தில் நான் எம்.எல்.ஏ., வாக இருந்தபோது, அதிகாரிகளை அழைத்து இதற்காக அப்பகுதியில் ஆய்வு செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தேன்.அப்போது அதிகாரிகள், அரசின் வழிகாட்டு மதிப்பில் பாதி தொகையை அப்பகுதி மக்களும், மீதியை அரசாங்கமும் வழங்க அரசு முடிவு செய்யப்பட்டது.ஆனால் இதுநாள் வரை அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நீண்ட நாட்களாக பட்டா வழங்காமல் உள்ளதால், அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விரைந்து பட்டா வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X