ஆளும் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை:அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

Added : ஆக 26, 2022 | |
Advertisement
புதுச்சேரி-'ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை' என அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது;சட்டசபை மக்கள் பிரச்னைகள் பேசும் இடம் தான். தொகுதி பிரச்னைகளை தீர்க்க, முதல்வர், அமைச்சர் கவனத்திற்கு எம்.எல்.ஏ.,க்கள் கொண்டு செல்கின்றனர். புதிய அரசு வந்த பிறகு 'ஆப்ரேஷன் விடியல்' மூலம் கஞ்சா விற்பவர்களை கைது செய்து, வழக்கு

புதுச்சேரி-'ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை' என அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது;சட்டசபை மக்கள் பிரச்னைகள் பேசும் இடம் தான். தொகுதி பிரச்னைகளை தீர்க்க, முதல்வர், அமைச்சர் கவனத்திற்கு எம்.எல்.ஏ.,க்கள் கொண்டு செல்கின்றனர். புதிய அரசு வந்த பிறகு 'ஆப்ரேஷன் விடியல்' மூலம் கஞ்சா விற்பவர்களை கைது செய்து, வழக்கு பதியப்பட்டு வருகிறது.கடந்த காலங்களை விட தற்போது கஞ்சா விற்பவர்களை கண்டறிந்து அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கிறது.புதுச்சேரி மாநில வளர்ச்சி, மக்கள் மேம்பாடு, மாணவர்களுக்கு பல திட்டங்களை இந்த அரசு அறிவித்துள்ளது.தேர்தல் நேரத்தில் மக்களுக்கு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுப்பதைத் தான் அவர்கள் எதிர்க்கின்றனர். இலவச திட்டங்களை எதிர்க்கவில்லை. பா.ஜ., - என்.ஆர்.காங்கிஸ் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X