'கேபிள் டிவி' எண்ணிக்கை ஆய்வு செய்ய கோரிக்கை

Added : ஆக 26, 2022 | |
Advertisement
புதுச்சேரி,-முதலியார்பேட்டை தொகுதியில் 14 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், 'கேபிள் டிவி' இணைப்பு 2 ஆயிரம் வீடுகளுக்கு மட்டுமே உள்ளதாக கணக்கு காட்டுகின்றனர்' என சம்பத் எம்.எல்.ஏ., (தி.மு.க.) கூறினார். சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது: புதுச்சேரி வாய்க்கால் வீதியில் 40 குடும்பங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மாற்று



புதுச்சேரி,-முதலியார்பேட்டை தொகுதியில் 14 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், 'கேபிள் டிவி' இணைப்பு 2 ஆயிரம் வீடுகளுக்கு மட்டுமே உள்ளதாக கணக்கு காட்டுகின்றனர்' என சம்பத் எம்.எல்.ஏ., (தி.மு.க.) கூறினார். சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது: புதுச்சேரி வாய்க்கால் வீதியில் 40 குடும்பங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக கொடுக்க வேண்டும்.நைனார்மண்டபம், வேல்ராம்பட்டில் ஆரம்ப பள்ளி கட்டடங்கள் தரமாக இல்லை. அர்ச்சுன சுப்புராயர் பள்ளியில் போதிய ஆசிரியர்கள், மேஜை, நாற்காலி இல்லை. ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்பு நடக்கிறது. இன்னும் 4 வகுப்பறை கட்டினால் இந்த நிலை மாறும். மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் பிரதமரின் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும்.ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் இடங்களை மீட்க வேண்டும். புதுச்சேரியில் தொழில் தொடங்க வருவோர், அதிக கெடுபிடிகள் விதிப்பதால், ஓடிப்போய் விடுகிறார்கள். தேங்காய்திட்டில் நவீன சுடுகாடு அமைக்க திட்டம் போடப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான பணி நடைபெறவில்லை.எனது தொகுதியில் 14 ஆயிரம் ரேஷன் கார்டு உள்ளது. ஆனால் கேபிள் கனெக்ஷன் 2 ஆயிரம் வீடுகளுக்கு மட்டுமே கணக்கு காட்டப்படுகிறது. இதனை ஆய்வு செய்ய வேண்டும். கேளிக்கை வரி கணக்கு எடுத்தாலே அரசு ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்கி விடலாம்.இவ்வாறு அவர் பேசினார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X