பா.ஜ., எம்.எல்.ஏ., தொகுதிகள் புறக்கணிப்பு; கல்யாணசுந்தரம் குற்றச்சாட்டு

Added : ஆக 26, 2022 | |
Advertisement
புதுச்சேரி-சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்கல்யாணசுந்தரம் (பா.ஜ.,): பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகளுக்காக நபார்டு, அம்ரூத், ஹட்கோ போன்ற நிறுவனங்களிடம் கடந்தாண்டு எவ்வளவு கடன் பெறப்பட்டது. அமைச்சர் லட்சுமிநாராயணன்: ரூ 5,438.74 லட்சம் கடனாக பெறப்பட்டுள்ளது.கல்யாணசுந்தரம்: இந்த நிதியில், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளில் எந்த



புதுச்சேரி-சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்கல்யாணசுந்தரம் (பா.ஜ.,): பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகளுக்காக நபார்டு, அம்ரூத், ஹட்கோ போன்ற நிறுவனங்களிடம் கடந்தாண்டு எவ்வளவு கடன் பெறப்பட்டது. அமைச்சர் லட்சுமிநாராயணன்: ரூ 5,438.74 லட்சம் கடனாக பெறப்பட்டுள்ளது.கல்யாணசுந்தரம்: இந்த நிதியில், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளில் எந்த வளர்ச்சிப் பணியும் மேற்கொள்ளப்படாமல் புறக்கணிக்கப் பட்டுள்ளது. இந்த நிதியாண்டிலாவது இந்த நிதியில் காலாப்பட்டு தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.அமைச்சர் லட்சுமிநாராயணன்: வேண்டுகோளை பரிசீலித்து காலாப்பட்டு தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப் படும்.கல்யாணசுந்தரம்: நெடுஞ்சாலை துறை மூலமாக கனகசெட்டிக் குளம் முதல் பிள்ளைச்சாவடி வரை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய அரசுக்கு உத்தேசம் உள்ளதா?அமைச்சர் லட்சுமிநாராயணன்: தற்போது உள்ள இ.சி.ஆர். கனகசெட்டிக்குளம் முதல் பிள்ளைச்சாவடி வரை நான்குவழி சாலையாக உள்ளது. இருப்பினும் புதுச்சேரி பொறியியல் கல்லுாரி முதல் மத்திய பல்கலைக்கழகம் வரை உள்ள சாலையை விரிவாக்க திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.கல்யாணசுந்தரம்: காலாப்பட்டு, ஆலங்குப்பம் பகுதியில் பாதாள சாக்கடை கழிவு நீர் திட்டம் கொண்டு வர அரசுக்கு உத்தேசம் உள்ளதா?அமைச்சர் லட்சுமிநாராயணன்: காலாப்பட்டு, ஆலங்குப்பம் பகுதிகளில் கள ஆய்வு செய்து நிதிநிலைக்கேற்ப பாதாள சாக்கடை கழிவுநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.கல்யாணசுந்தரம்: கனகசெட்டிக்குளம், பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, ஆலங்குப்பம், பிள்ளைச்சாவடி பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் உழவர்கரை நகராட்சி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பொதுப்பணித் துறை எடுத்துக்கொள்ள 2016ல் அமைச்சரவை ஒப்புதல் அளித்தும் ஏன் எடுத்துக் கொள்ளவில்லை.அமைச்சர் லட்சுமிநாராயணன்: காலாப்பட்டு, ஆலங்குப்பம் பகுதியில் குடிநீர் விநியோகம் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ள நிதி நிலைமைக்கேற்ப பரிசீலிக்கப்படும்.கல்யாணசுந்தரம்: அடிப்படைத் தேவையான குடிநீருக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.அமைச்சர் லட்சுமிநாராயணன்: பரிசீலனை செய்து தேவைக்கேற்ப உடனடியாக நிறைவேற்றப்படும். கல்யாணசுந்தரம் : நகரில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் கருவடிக்குப்பம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு சுத்திகரிப்பு செய்து, வெள்ளவாரி ஓடையில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் சரியான முறையில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறதா.அமைச்சர் லட்சுமிநாராயணன்: கழிவுநீர் சரியான முறையில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, பல்வேறு உபயோகத்திற்கு போக உபரிநீர் வெள்ளவாரி வாய்க்காலில் வெளியேற்றப்படுகிறது. அடிக்கடி கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.கல்யாணசுந்தரம்: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் அப்பகுதியில் பெரும் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா.அமைச்சர் லட்சுமிநாராயணன்: சுத்திகரிக்கப்பட்ட நீரின் பெரும்பான்மையான அளவில் கழிவுநீர் பண்ணையில் மரங்கள், புல் வளர்ப்பதற்கும் சில தொழிற்சாலைகளின் உபயோகத்திற்கும், நிலத்தடி நீர் செறிவூட்டவும் பயன்படுத்தப்படுகிறது. எஞ்சிய கழிவு நீர் வெள்ளவாரி ஓடையில் விடப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட உபரி கழிவு நீரை உபயோகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X