மாநில தேர்வு வாரியம்முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

Added : ஆக 26, 2022 | |
Advertisement
புதுச்சேரி,-'உள்துறை அமைச்சகத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றவுடன் மாநில தேர்வு வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என முதல்வர் ரங்கசாமி கூறினார். சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடைபெற்ற விவாதம்:அனிபால் கென்னடி (தி.மு.க): மாநில தேர்வாணையம் அமைக்க அரசு முன்வருமா? ஆம் எனில் எப்போது? இல்லை என்றால் என்ன காரணம்? நடப்பு நிதியாண்டில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுமா?



புதுச்சேரி,-'உள்துறை அமைச்சகத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றவுடன் மாநில தேர்வு வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என முதல்வர் ரங்கசாமி கூறினார். சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடைபெற்ற விவாதம்:அனிபால் கென்னடி (தி.மு.க): மாநில தேர்வாணையம் அமைக்க அரசு முன்வருமா? ஆம் எனில் எப்போது? இல்லை என்றால் என்ன காரணம்? நடப்பு நிதியாண்டில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுமா? முதல்வர் ரங்கசாமி: புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் அரசியல் சாசனப்படி தனியாக தேர்வாணையம் அமைக்க இயலாது. இருப்பினும், அரசிதழ் பதிவு பெறாத 'பி' பிரிவு மற்றும் 'சி' பிரிவு ஊழியர்களை தேர்வு செய்ய ஒரு தேர்வு வாரியம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி வேண்டி கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றவுடன் தேர்வு வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.அனிபால் கென்னடி: 2018ல் நடைபெற்ற துணை பேராசிரியர்களுக்கான தேர்வில் 90 சதவீதத்திற்கும் மேலானவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். எதிர்க்கட்சி தலைவர் சிவா: பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் விரிவுரையாளர்கள் கூட வட மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மொழி புரியாமல் இவர்களிடம் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். முதல்வர் ரங்கசாமி: இதற்குத்தான் மாநில அந்தஸ்தும், அதிகாரமும் கேட்டு வலியுறுத்தி வருகிறோம். தற்போது டில்லி சென்றிருந்தபோது கூட வலியுறுத்தி உள்ளோம். மாநில அந்தஸ்து பெற்றால் தேர்வாணையம் அமைக்க முடியும். நாஜிம் (தி.மு.க): 'பி' பிரிவில் உள்ள 'நான் கெஸட்டடு' ஆபிசர் பணியிடங்களை புதுச்சேரி அரசே தேர்வு செய்து நியமித்துக் கொள்ள ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையிலேயே கூறப்பட்டுள்ளது. அதன்படி செய்யுங்கள். முதல்வர் ரங்கசாமி: இது தொடர்பாக மத்திய அரசிடம் பேசி முடிவு காணப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X