பொறியியல் கல்லுாரி சிவா வலியுறுத்தல் | Dinamalar

பொறியியல் கல்லுாரி சிவா வலியுறுத்தல்

Added : ஆக 26, 2022 | |
புதுச்சேரி,---வில்லியனுாரில் அரசு பொறியியல் கல்லுாரி புதியதாக தொடங்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது போது நடந்த விவாதம்:எதிர்க்கட்சித் தலைவர் சிவா: வில்லியனுார் தொகுதி சுல்தான்பேட்டையில் அரசு தொழில்நுட்ப கல்லுாரி அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு என்னவானது?.அமைச்சர் நமச்சிவாயம்: அரசு தொழில்நுட்பக்



புதுச்சேரி,---வில்லியனுாரில் அரசு பொறியியல் கல்லுாரி புதியதாக தொடங்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது போது நடந்த விவாதம்:எதிர்க்கட்சித் தலைவர் சிவா: வில்லியனுார் தொகுதி சுல்தான்பேட்டையில் அரசு தொழில்நுட்ப கல்லுாரி அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு என்னவானது?.அமைச்சர் நமச்சிவாயம்: அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில் சேர்க்கை குறைவாக உள்ளதால் சுல்தான்பேட்டையில் புதிய தொழில்நுட்பக் கல்லுாரி துவங்கும் எண்ணம் இல்லை.எதிர்க்கட்சித் தலைவர் சிவா: புதுச்சேரி அடுத்த பெருநகரமாக விளங்கும் வில்லியனுாரை சுற்றி உள்ள கிராமப்புற மாணவர்கள், ஏழை, எளிய, சிறுபான்மையினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிட மாணவர்கள் பொறியியல் படிப்பிற்காக பொறியியல் பல்கலைக் கழகத்தை நம்பியே உள்ளனர். அவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வில்லியனுாரில் பொறியியல் கல்லுாரி அமைக்க வேண்டும். அதேபோல் சுல்தான்பேட்டையில் வாடகை கட்டடத்தில் இயங்கும் அரசு ஆரம்ப பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும்.மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை, சிறுபான்மையினர் மற்றும் ஆதிதிராவிட மாணவர்கள் பயன்பெறும் வகையில் மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்கிறது. அதில் தமிழகத்தில் நடப்பாண்டு ரூ. 44 கோடி நிதி பெறப்பட்டு ஏழை, நடுத்தர, சிறுபான்மையினர் மற்றும் ஆதிதிராவிட மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி வளர்ச்சி மேம்படுத்தப்படுகிறது. அதுபோல் புதுச்சேரி அரசும் மத்திய அரசிடம் நிதி பெற்று சிறுபான்மையின, ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி மேம்பாடு அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் நமச்சிவாயம்: கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வில்லியனுாரில் பொறியியல் கல்லுாரி புதியதாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். சுல்தான்பேட்டை ஆரம்பப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டவும் அரசு நடவடிக்கை எடுக்கும். மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறையிடம் நிதிப்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X