மகள் சாவில் சந்தேகம்: தாய் போலீசில் புகார்

Added : ஆக 26, 2022 | |
Advertisement
கடலுார்-கடலுார், தேவனாம்பட்டினம், சுனாமி நகரைச் சேர்ந்தவர் மஞ்சனி மகன் நவீன் 33; மீன்பிடி தொழில் செய்கிறார். இவர், அதே ஊரைச் சேர்ந்த முத்து மகள் பவித்ரா 28; என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.நவீனுக்கு மீன்பிடி தொழில் நஷ்டத்தால், அதிக கடன் சுமை ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் தினமும் கடனை கேட்டு வந்ததால்,



கடலுார்-கடலுார், தேவனாம்பட்டினம், சுனாமி நகரைச் சேர்ந்தவர் மஞ்சனி மகன் நவீன் 33; மீன்பிடி தொழில் செய்கிறார். இவர், அதே ஊரைச் சேர்ந்த முத்து மகள் பவித்ரா 28; என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.நவீனுக்கு மீன்பிடி தொழில் நஷ்டத்தால், அதிக கடன் சுமை ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் தினமும் கடனை கேட்டு வந்ததால், பவித்ரா மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு பவித்ரா வீட்டில் துாக்குப் போட்டுக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்ததை உறுதி செய்தார்.பவித்ரா இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது தாய், போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், தேவனாம்பட்டினம் போலீசார் சந்தேக மரணத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X