வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:தஞ்சை மாவட்டம், பேராவூரணி தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் நடத்திய மொய் விருந்தில், 11 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலாகியுள்ளது.
![]()
|
இத்தனை பெரிய அறுவடையை நிகழ்த்திக் காட்டிய தனியார் இதுவரை யாரும் இல்லை.வாழ்வதற்கு வழியில்லாமல், வாழ்விலே மீண்டு வர கடைசி வாய்ப்பு மொய் விருந்து நடத்துவது. அதை தன் சுயலாபத்திற்காக, 8,000 பேருக்கு அசைவ, சைவ உணவு பரிமாறி இருக்கிறார் அசோக்குமார்.
மொய் வாங்கும் கவுன்டர்கள், பணம் எண்ணும் இயந்திரம், உடனே வங்கிக் கணக்கில் சேர்க்க அதிகாரிகள் என்று குட்டி ரிசர்வ் வங்கி போல், மொய் வசூல் நடத்தப்பட்டுள்ளது. விருந்துக்கு வந்தவர்கள் அனைவரும், 1,000 ரூபாயில் துவங்கி, 5 லட்சம் ரூபாய் வரை வசதிக்கேற்ப மொய் செய்துள்ளனர்.
இது சத்தியமா, சாத்தியமா?
அங்கே தான் நிற்கிறது தி.மு.க.,வின் விஞ்ஞானபூர்வ ஊழல் திறமை. வீட்டில் அதிக கரன்சிகளை வைப்பது குற்றம். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்த வரித் துறை கேள்வி கேட்கும் என்று சாமானிய மக்களுக்கு சொல்கிறது சட்டம். ஆனால், அசோக்குமார் அடித்தது, ஒரே கல்லில் ஆறு மாங்காய். விஞ்ஞானபூர்வ வித்தைகள் காட்டும் வித்தகத்தில், தலைமையையே விஞ்சும் கைதேர்ந்த திறமைசாலிகள் தி.மு.க.,வினர்.
![]()
|
சமீபத்தில் தி.க., தலைவர் வீரமணிக்கு எடைக்கு எடை மக்கள் வழங்கும் கரன்சிகள் துலாபாரத்தில் வைக்கப்பட்டன. வீரமணி அமர்ந்த தராசை ஒருவர் முட்டிக்காலால் முட்டு கொடுத்த காட்சி, சமூக ஊடகத்தில் பரவியது. அங்கே தராசால் கறுப்புகள் வெளுக்கப்பட்டன. மக்களையும், அரசையும் முட்டாளாக நினைக்கும் கூட்டு கொள்ளைகள் இப்போது தான் வெளிச்சப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.