வீட்டு உபயோக ஜவுளி தொழிலுக்கு முதலீட்டு மானியம்!: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Updated : ஆக 26, 2022 | Added : ஆக 26, 2022 | |
Advertisement
திருப்பூர்--''வீட்டு உபயோக ஜவுளி தொழில், சிறப்பு வகை தொழிலாக அறிவிக்கப்படுகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் துறை சார்பில், முதலீட்டு மானியம் வழங்கப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற பெயரிலான மண்டல மாநாடு, திருப்பூர், திருமுருகன்பூண்டியில் நேற்று

திருப்பூர்--''வீட்டு உபயோக ஜவுளி தொழில், சிறப்பு வகை தொழிலாக அறிவிக்கப்படுகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் துறை சார்பில், முதலீட்டு மானியம் வழங்கப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.



latest tamil news



குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற பெயரிலான மண்டல மாநாடு, திருப்பூர், திருமுருகன்பூண்டியில் நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது:கடந்த, 15 மாதத்தில் நடத்தப்பட்ட முதலீட்டு மாநாடு மூலம், 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 2.20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.

மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதில், 49 எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு, 1,300 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது.

வங்கிகள் இணைப்பு

புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்களில், 19 நிறுவனங்கள், 1,522 கோடி ரூபாய் முதலீடு செய்து, உற்பத்தியை துவக்கி, 1,909 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளன.கடன் உத்தரவாத திட்டம் மூலம் குறு, சிறு நிறுவனங்கள் பிணையில்லா கடன், எளிதாக பெற முடியும். இத்திட்டம் இணைய தளம் வாயிலாக செயல்படும். முதற்கட்டமாக, ஆறு வங்கிகள் இணைக்கப்படும்; அடுத்தாண்டுக்குள் அனைத்து வங்கிகளும் இணைக்கப்படும்.

தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடிக்கான தளம் மூலம், தயாரிப்புகளை விற்பனை செய்வதில் உள்ள சிரமம், கால தாமதம் குறையும்; நடைமுறை மூலதன கடன் தேவை குறையும்.அரசு தரும் உத்தரவாதத்தால், வங்கிகள் போட்டி போட்டு, மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்கும்.எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், வங்கி கடனுக்கான சொத்து பிணைய பத்திரப்பதிவு செய்ய 'ஆன்லைன்' வசதி செய்யப்பட்டுள்ளது.

சார்-பதிவாளர்கள் அலுவலகம் செல்லாமல், வங்கிகளில் இருந்தே உரிய கட்டணம் செலுத்தி, பதிவு செய்து கொள்ளலாம்.பட்டியலின பழங்குடி மக்கள் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் துவங்க, 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பயனாளிகள் தேர்வு நடக்கிறது. வங்கிகள் மூலம் எளிதாக கடன் பெற 'தாட்கோ' வங்கி மற்றும் தொழில் முதலீட்டு கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

வழிகாட்டு மையம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம், அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை, 2,092 நிறுனங்களுக்கு, 21.13 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது.இதில், 99 சதவீதம் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. தொழிற்பேட்டைகளில் மனைகளின் மதிப்பீட்டு விலை குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட தொழில் மையத்திலும், ஒரு ஏற்றுமதி வழிகாட்டு மையம் விரைவில் துவங்கப்படும்.

கடந்த, ஜூலையில் துவங்கப்பட்ட, ஒற்றை சாளர 'இணைய தளம் 2.0' தளத்தில், இதுவரை, 10 ஆயிரத்து 556 விண்ணப்பம் பெறப்பட்டு, 9,212 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது; இது, 87 சதவீதம்.'ஹோம் டெக்ஸ்டைல்' எனப்படும் வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்கள், ஆண்டுக்கு, 8,000 கோடி ரூபாய்க்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டு, அதில், 4,000 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


latest tamil news



இந்த வகை பொருட்கள் தயாரிப்பை, சிறப்பு வகை தொழில் துறை என அறிவித்து, முதலீட்டு மானியம் வழங்க வேண்டும் என்ற தொழில் துறையினரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது.இதனால், பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன் பெறுவர். இதுபோன்ற ஆக்கப்பூர்வ ஆலோசனைகளுக்கு செவிமடுக்க அரசு தயாராக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

திருப்பூராக மாற வேண்டும்!

முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:வந்தாரை வாழ வைக்கும் நகராக திருப்பூர் விளங்குகிறது. அதற்கு காரணம், பின்னலாடை தொழில் தான். நாட்டின், பின்னலாடை தலைநகராக திருப்பூர் உள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் அரிசி ஆலைகள்; வெள்ளக்கோவில், காங்கயத்தில் சமையல் எண்ணெய்; ஊத்துக்குளியில் நெய்; காங்கயம், தாராபுரம், உடுமலையில், கயிறு, சார்ந்த பொருட்கள்.திருப்பூர், அவிநாசி, பல்லடத்தில் அட்டைப் பெட்டி, விசைத்தறி; திருமுருகன்பூண்டி, அவிநாசியில் கற்சிற்பம். பல்லடம், உடுமலையில், கறிக்கோழி பண்ணை, கோழித்தீவன ஆலைகள் என பல தொழில்கள் உள்ளன. சிறு, குறு தொழில்களின் மையமாக திருப்பூர் உள்ளது. மற்ற மாவட்டங்களும் இதுபோன்று மாற வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.



முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:வந்தாரை வாழ வைக்கும் நகராக திருப்பூர் விளங்குகிறது. அதற்கு காரணம், பின்னலாடை தொழில் தான். நாட்டின், பின்னலாடை தலைநகராக திருப்பூர் உள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் அரிசி ஆலைகள்; வெள்ளக்கோவில், காங்கயத்தில் சமையல் எண்ணெய்; ஊத்துக்குளியில் நெய்; காங்கயம், தாராபுரம், உடுமலையில், கயிறு, சார்ந்த பொருட்கள்.திருப்பூர், அவிநாசி, பல்லடத்தில் அட்டைப் பெட்டி, விசைத்தறி; திருமுருகன்பூண்டி, அவிநாசியில் கற்சிற்பம். பல்லடம், உடுமலையில், கறிக்கோழி பண்ணை, கோழித்தீவன ஆலைகள் என பல தொழில்கள் உள்ளன. சிறு, குறு தொழில்களின் மையமாக திருப்பூர் உள்ளது. மற்ற மாவட்டங்களும் இதுபோன்று மாற வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X