மருத்துவக்கல்லூரி நுழைவாயில் அருகே விபத்துக்களை தடுக்க இரும்பு தடுப்பு

Added : ஆக 26, 2022 | |
Advertisement
தேனி, -தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நுழைவாயில் அருகே விபத்துக்களை தடுக்க இரும்பு தடுப்பு வேலி அமைக்க கான்கிரீட் அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன.தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நுழைவாயில் அருகே கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பஸ், ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதனை தவிர்க்க ஆண்டிபட்டி
மருத்துவக்கல்லூரி நுழைவாயில் அருகே விபத்துக்களை தடுக்க இரும்பு தடுப்பு

தேனி, -தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நுழைவாயில் அருகே விபத்துக்களை தடுக்க இரும்பு தடுப்பு வேலி அமைக்க கான்கிரீட் அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன.தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நுழைவாயில் அருகே கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பஸ், ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதனை தவிர்க்க ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டர் சிவக்குமார், க.விலக்கு எஸ்.ஐ., சரவணன் முயற்சியில், தனியார் நிறுவன தன்னார்வலர் பங்களிப்புடன். நுழைவாயில் பகுதியில் இருந்து பஸ் நிறுத்தம் வரை இருப்பு தடுப்பு வேலி அமைக்கப்படுகிறது. இப் பணிக்கு கான்கிரீட் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. போலீசார் கூறுகையில், விபத்து அடிக்கடி நடக்கும் இடமாக கண்டறிந்து, அதனை தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள எஸ்.பி., உத்தரவிட்டார். அதன்படி இப்பணிகள் நடக்கிறது.இனி மதுரையில் இருந்து தேனி வரும் பஸ்கள் கட்டாயம் பஸ் நிறுத்தத்தில்தான் நிற்க வேண்டும். ரோட்டில் நிறுத்த முடியாது. பயணிகளும் ரோட்டில் நின்று பஸ் ஏற முடியாது. இதனால் விபத்து தவிர்க்கப்படும். இதற்கு பயணிகள், பொதுமக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X