பெண் போலீசுக்கு செக்ஸ் டார்ச்சர்; இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஆக 26, 2022 | Added : ஆக 26, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
இந்திய நிகழ்வுகள்3 பயங்கரவாதிகள்சுட்டுக் கொலை ஸ்ரீநகர்-ஜம்மு - காஷ்மீரில், எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற மூன்று பயங்கரவாதிகள் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு - காஷ்மீரில், பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ, பயங்கரவாதிகள் காத்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு சமீபத்தில் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு
கிரைம் ரவுண்ட் அப்,  பயங்கரவாதிகள்,  பெண் போலீஸ்,  சோனாலி போகத் , Crime Round Up, Terrorists, Female Police, Sonali Phogat,


இந்திய நிகழ்வுகள்
3 பயங்கரவாதிகள்சுட்டுக் கொலை


ஸ்ரீநகர்-ஜம்மு - காஷ்மீரில், எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற மூன்று பயங்கரவாதிகள் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு - காஷ்மீரில், பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ, பயங்கரவாதிகள் காத்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு சமீபத்தில் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது, வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி செக்டாரில் சிலர் அத்துமீறி ஊடுருவ முயன்றனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் சுட்டதில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


பா.ஜ., பிரமுகர் மரணம்கொலை வழக்கு பதிவு


பணஜி-கோவாவில், மர்மமான முறையில் உயிரிழந்த பா.ஜ., பிரமுகரும், நடிகையுமான சோனாலி போகத் உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரது உதவியாளர்கள் இருவர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஹரியானாவை சேர்ந்த, 'டிவி' தொகுப்பாளரும், நடிகையுமான சோனாலி போகத், 42, 'டிக் டாக் வீடியோ'க்கள் வாயிலாக பிரபலமடைந்தார். பா.ஜ.,வில் இணைந்து ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கட்சியில் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார்.இவர் சமீபத்தில் கோவா வந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர். கோவா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை நடந்தது. மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், சோனாலியின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சோனாலியின் உதவியாளர்கள் சுதிர் சக்வான், சுக்விந்தர் வாசி ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக சோனாலியின் சகோதரர் ரிங்கு தாகா போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இதையடுத்து சோனாலியின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் அவரது உதவியாளர்கள் இருவரை குற்றவாளிகளாக சேர்த்தனர்.


ஜீப் லாரி மோதிய விபத்தில் 9 பேர் பலி


துமகுரு -கர்நாடகாவில் ஜீப்பும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில், நேற்று ஒன்பது பேர் உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்தனர்.

கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் ஜீப் ஒன்றில் பெங்களூருக்கு நேற்று அதிகாலை சென்றனர். அப்போது சாலையில் சென்ற லாரியை, ஜீப் முந்த முயன்றுள்ளது. இதில், டிரைவர்களின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப்பும், லாரியும் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், ஒன்பது பேர் உயிரிழந்தனர்; படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் சிலர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தில்உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாரணத் தொகையை அறிவித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, இறந்தவர்களின் உறவினர்களுக்கு மாநில அரசு சார்பாக தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


தமிழக நிகழ்வுகள்
பெரம்பலூர் எஸ்.பி. ஆபிஸ் சூப்பிரண்டுக்கு கட்டாய ஓய்வு


பெரம்பலுார்; பெண் போலீசுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக எழுந்த புகாரில் சிக்கிய பெரம்பலுார் எஸ்.பி., ஆபிஸ் அலுவலக சூப்பர்ண்டுக்கு கட்டாய ஓய்வு வழங்கி திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணன் சுந்தர் உத்தரவிட்டுள்ளார். பெரம்பலுார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றியவர் ஹரிஹரன்.
இவர், கடந்தாண்டு செப். 2ம் தேதி பெரம்பலுார் மாவட்ட ஆயுதப்படை பிரிவை சேர்ந்த பெண் போலீஸ் ரத்னா என்பவர் அவரது சம்பளம் தொடர்பாக இவரை அணுகியபோது, அவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸ் ரத்னா உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, பெரம்பலுார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வரவேற்பு அறையில் ரத்னா 18ம் தேதி பணியில் இருந்த போது ஹரிஹரன் மிரட்டியதுடன், இதன் பின்னரும் பெண் போலீஸ் ரத்னா மற்றும் இந்திரா உள்ளிட்ட சில பெண் போலீசுக்கு பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து, விசாகா கமிட்டி விசாரித்தது. அதில், ஹரிஹரன் பெண் போலீஸ் பலருக்கு இதே போல் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது சந்தேகத்துக்கிடமின்றி நிரூபனமானது. இதைத்தொடர்ந்து, அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றிய ஹரிஹரனுக்கு கட்டாய ஓய்வு வழங்கி திருச்சி சரக டி.ஐ.ஜி., சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்மனைவி கொலை; கணவருக்கு ஆயுள்


மதுரை-மேலுார் அருகே கீழவளவு முருகன்,42. கேபிள் 'டிவி' ஆப்பரேட்டராகஇருந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். முருகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதற்காக அடிக்கடி மனைவி செல்வியிடம் 25, பணம் கேட்டு தகராறு செய்தார். செல்வி பணம் தர மறுத்தார். அவரை 2015ல் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்ததாக முருகன் மீது கீழவளவு போலீசார் வழக்குப் பதிந்தனர். மதுரை மகளிர் அமர்வு நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மதுரம்: முருகனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.


மது விற்பனை டீ கடைக்காரர் கைது


வேடசந்தூர்,-வேடசந்தூர் நாககோனானூரில் அனுமதியின்றி சில்லறை மது விற்பனை தொடர்ந்து நடந்தது.இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் திடீர் ரோந்து சென்றனர். நாகப்பன் 51, டீக்கடையில் நடத்திய சோதனையில் 120 குவாட்டர் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


மாணவி தற்கொலைபண்ருட்டி-பண்ருட்டி அருகே பிளஸ் 2 மறுதேர்வில் தோல்வியடைந்த மாணவி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.பண்ருட்டி அடுத்த அழகுபெருமாள்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினவேல் மகள் ரசியா,17. ஒறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்த இவர், இயற்பியல், ஆங்கில பாடத்தில் தோல்விடைந்தார்.பின், மறுதேர்வு எழுதிய ரசியா இயற்பியல் பாடத்தில் தோல்வியடைந்தார். இதனால், மனமுடைந்த அவர், வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


மகள் சாவில் சந்தேகம்: தாய் போலீசில் புகார்கடலுார்-கடலுார், தேவனாம்பட்டினம், சுனாமி நகரைச் சேர்ந்தவர் மஞ்சனி மகன் நவீன் 33; மீன்பிடி தொழில் செய்கிறார். இவர், அதே ஊரைச் சேர்ந்த முத்து மகள் பவித்ரா 28; என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.நவீனுக்கு மீன்பிடி தொழில் நஷ்டத்தால், அதிக கடன் சுமை ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் தினமும் கடனை கேட்டு வந்ததால், பவித்ரா மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு பவித்ரா வீட்டில் துாக்குப் போட்டுக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்ததை உறுதி செய்தார்.பவித்ரா இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது தாய், போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், தேவனாம்பட்டினம் போலீசார் சந்தேக மரணத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


பலே திருடன் கைது: 40 சைக்கிள்கள் பறிமுதல்


அசோக் நகர்:சென்னையில் பல்வேறு இடங்களில் சைக்கிள் திருடிய நபரை கைது செய்த போலீசார், 40 சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை, மேற்கு மாம்பலம், பரோடா பிரதான சாலையைச் சேர்ந்தவர் மணிகண்டன், 37. இவரது வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது மகளின் விலை உயர்ந்த சைக்கிளை, கடந்த 22ம் தேதி மர்ம நபர் திருடி சென்றார்.


latest tamil newsஇது குறித்த புகாரையடுத்து, அசோக் நகர் போலீசார் விசாரித்தனர்.அதன் படி, சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது, திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்துாரைச் சேர்ந்த வெங்கடேஷ், 57, என, தெரியவந்தது. தொடர் விசாரணையில், இவர் சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து சைக்கிள்களை திருடி, குறைந்த விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.இதையடுத்து, வெங்கடேஷை கைது செய்த போலீசார், 40 சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.


அடங்க மாட்றாங்கய்யாஇறப்பு சான்றுக்கு லஞ்சம்பெண் ஆய்வாளர் கைது


திருத்தணி:இறப்பு சான்று வழங்கக்கோரி விண்ணப்பித்தவரிடம், 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டு பெற்ற பெண் வருவாய் ஆய்வாளரை, லஞ்ச ஓழிப்பு போலீசார் நேற்று, கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், வினோத்குமார், 27. இவர், தன் தாத்தா கோவிந்தரெட்டி, மாமா கஜேந்திரன் ஆகியோரது இறப்பு சான்று கேட்டு, கடந்த பிப்ரவரி மாதம், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.அப்போதைய, திருத்தணி வருவாய் ஆய்வாளர் ஜெய்சங்கர், வினோத்குமாரின் விண்ணப்ப மனுவை போதிய ஆதாரங்கள் இல்லாததால் தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் திருத்தணி வருவாய் ஆய்வாளர் ஜெய்சங்கர் பணியிட மாறுதல் பெற்று சென்றார். பின், திருத்தணி புதிய வருவாய் ஆய்வாளராக ஜெயலட்சுமி நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், வினோத்குமார், 10 நாட்களுக்கு முன், மீண்டும் தாத்தா, மாமாவின் இறப்பு சான்று கோரி விண்ணப்பித்துள்ளார்.

இந்த முறை விண்ணப்பம், திருத்தணி வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமியிடம் வந்தது.அதை தொடர்ந்து வினோத்குமார், பெண் வருவாய் ஆய்வாளரை அணுகி, இறப்பு சான்று பரிந்துரை செய்யுமாறு கோரியுள்ளார்.அதற்கு அவர், 2,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து, திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,கலைச்செல்வனிடம் வினோத்குமார், புகார் கொடுத்தார்.

அதை தொடர்ந்து, நேற்று, டி.எஸ்.பி., கலைச்செல்வன் அறிவுறுத்தலின்படி வினோத்குமார், நான்கு 500 ரூபாய் நோட்டுகளை, திருத்தணி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில் இருந்த பெண் ஆய்வாளர் ஜெயலட்சுமியிடம் கொடுத்தார்.அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார், ஆய்வாளர் ஜெயலட்சுமியை கைது செய்தனர்.


7 மாத கர்ப்பிணி கொலை: கணவர் கைதுவிருத்தாசலம்-விருத்தாசலத்தில் ஏழு மாத கர்ப்பிணியை சாரணியால் அடித்துக் கொலை செய்த, காதல் கணவரை போலீசார் கைது செய்தனர்.


latest tamil newsகடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் அற்புதராஜ், 20; காய்கறி மார்க்கெட் கூலி தொழிலாளி.விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர், சுதாகர் நகரைச் சேர்ந்தவர் லதா மகள் சக்தி, 18. இவர் பேக்கரியில் வேலை செய்தபோது, அற்புதராஜூடன் காதல் ஏற்பட்டது.இருவரும் நெருக்கமாக பழகியதால், சக்தி கர்ப்பமடைந்தார்.

இதையடுத்து, இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டு, சக்தி வீட்டில் வசித்தனர். தற்போது சக்தி 7 மாத கர்ப்பமாக உள்ளார். தனக்கு வளைகாப்பு நடத்துமாறு, அற்புதராஜிடம், சக்தி கூறியுள்ளார். ஆனால், ஏற்கனவே, கடன் சுமை அதிமாக உள்ளதாக கூறி, அற்புதராஜ் மறுத்து வந்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கூலி வேலைக்கு சென்ற சக்தியின் தாய் லதா, நேற்று மாலை 5:00 மணியளவில், வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முகம், கழுத்து ஆகிய இடங்களில் ரத்த காயங்களுடன் சக்தி இறந்து கிடந்தார்.விருத்தாசலம் போலீசார், சக்தியின் உடலை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சக்தியின் உடலில் காயங்கள் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர்.

அதில், அற்புதராஜ், சக்தியை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.அவர், போலீசில் அளித்த வாக்குமூலம். சக்தி வளைகாப்பு நடத்த வேண்டும் கூறி வந்தார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால், எங்களுக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. நேற்று காலை 11:00 மணியளவில், எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நான், வீட்டில் இருந்த சாரணி கரண்டியால் அவரை தாக்கினேன்.இதில் சக்தி மயங்கி விழுந்தார். ஆத்திரத்தில் அவரது கழுத்து முகத்தில் கையால் குத்தி தாக்கிவிட்டு, வேலைக்கு சென்றேன். அதன்பின், மூன்று முறை வீட்டிற்கு வந்து சக்தி மயக்கம் தெளிந்துவிட்டாரா, இல்லையா என பார்த்தேன். அவர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். இதனால், கூலி வேலைக்கு சென்றிருந்த மாமியார் லதாவின் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தங்களின் மகள் எனது போனை எடுக்கவில்லை. நான் வேலையாக இருக்கிறேன், நீங்கள் வீட்டிற்கு சென்று பாருங்கள் என கூறினேன்.

வீட்டிற்கு சென்ற அவர், சக்தி இறந்து கிடப்பதாக மொபைல் போனில் என்னிடம் கூறினார். நான் எதுவும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்து, மனைவியின் உடலைப் பார்த்து கதறி அழுத்தேன். பின், போலீசார் விசாரணையில் சிக்கி கொண்டேன். இவ்வாறு அவர் போலீசில் தெரிவித்துள்ளார்.காதல் மனைவியை கர்ப்பிணி என்றும் பாராமல், கொடூரமாக அடித்துக் கொலை செய்து, நாடகமாடிய காதல் கணவரை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
26-ஆக-202212:41:45 IST Report Abuse
jayvee இதேபோல் அமல் மற்றும் ரோஹிணியும் கட்டாய ஓய்வு கொடுத்து.. தண்டனையும் கொடுக்கவேண்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X