முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Added : ஆக 26, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை-முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர், மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் என்பதை, போலீசார் கண்டுபிடித்தனர்.சென்னை, எழும்பூரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர் ஒருவர் பேசினார். 'இன்னும் ஒரு மணி நேரத்தில், முதல்வர் ஸ்டாலின் வீடு உட்பட, பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்க உள்ளது' என, கூறி விட்டு தொடர்பை
 முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்



சென்னை-முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர், மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் என்பதை, போலீசார் கண்டுபிடித்தனர்.

சென்னை, எழும்பூரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர் ஒருவர் பேசினார். 'இன்னும் ஒரு மணி நேரத்தில், முதல்வர் ஸ்டாலின் வீடு உட்பட, பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்க உள்ளது' என, கூறி விட்டு தொடர்பை துண்டித்தார். உடனடியாக, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின், தேனாம்பேட்டை போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். உடனடியாக, மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் போலீசார், ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்; வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இது வெறும் புரளி என தெரியவந்தது.

இதையடுத்து, மிரட்டல் விடப்பட்ட நபர் பயன்படுத்திய மொபைல் போன் எண் மற்றும் 'சிக்னல் டவரை' போலீசார் ஆய்வு செய்தனர். அது, கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையை காண்பித்தது. அங்கு விரைந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி, 'வார்டு பாய்' ஒருவரை பிடித்தனர். 'நான் மிரட்டல் விடுக்கவில்லை. என் மொபைல் போன் சிறிது நேரம் காணவில்லை. யாரோ எடுத்துச் சென்று, மீண்டும் எடுத்து வந்து வைத்துள்ளனர்' என, கூறியுள்ளார்.

தொடர் விசாரணையில், அங்கு சிகிச்சை பெற்று வரும், விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ்வர், 28, என்பவர், வார்டு பாய் மொபைல் போனை எடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இவர், ஏற்கனவே நடிகர்கள் மற்றும் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் தெரியவந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
26-ஆக-202217:38:34 IST Report Abuse
DVRR ,,,,,
Rate this:
Cancel
ThiaguK - Madurai,இந்தியா
26-ஆக-202211:08:36 IST Report Abuse
ThiaguK அதிகார போதையில் உள்ளவ ர்களும் அடங்கும்
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
26-ஆக-202210:02:41 IST Report Abuse
jayvee பப்ளிசிட்டி பைத்தியம் நான் பைத்தியத்தை சொன்னேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X