மானாமதுரையில் வாழை இலை விலை உயர்வு| Dinamalar

மானாமதுரையில் வாழை இலை விலை உயர்வு

Added : ஆக 26, 2022 | |
மானாமதுரை : முகூர்த்த நாட்கள்,விநாயகர் சதுர்த்தி வருவதால் வாழை இலை விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.ஆவணி பிறந்ததையடுத்து முகூர்த்த நாட்கள் அதிகம் வருகிறது. ஆக.,31ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தற்போது வாழை இலை விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக 200 இலை கொண்ட ஒரு கட்டின் விலை

மானாமதுரை : முகூர்த்த நாட்கள்,விநாயகர் சதுர்த்தி வருவதால் வாழை இலை விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.



ஆவணி பிறந்ததையடுத்து முகூர்த்த நாட்கள் அதிகம் வருகிறது. ஆக.,31ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தற்போது வாழை இலை விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக 200 இலை கொண்ட ஒரு கட்டின் விலை ரூ.1400 லிருந்து ரூ.2000 வரை விற்பனையாகிறது.



வாழை இலை வியாபாரிகள் கூறுகையில், ஆவணி பிறந்தது முதல் தொடர்ந்து முகூர்த்த நாட்களாக வருவதால் வாழை இலைக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வாழை இலை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது வாழை இலை தோட்டங்களில் காற்று வேகமாக அடிப்பதால் ஏராளமான இலைகள் கிழிவதாலும் இலைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விலை உயர்ந்து காணப்படுகிறது, என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X