மேம்பால பணி நிறைவு பெறும் வரை பாதை தடுப்புகளை அகற்ற எதிர்பார்ப்பு

Added : ஆக 26, 2022 | |
Advertisement
ராபாளையம் : ராஜபாளையம் மேம்பால பணி நிறைவு பெறும் வரை பி.எஸ்.கே நகரிலிருந்து ஐ.என்.டி.யு.சி நகருக்கு செல்லும் வழியிலுள்ள ரயில்வே, தனியாருக்கு சொந்தமான இடங்களிலுள்ள தடுப்புகளை அகற்றி வாகனங்கள் 4.கி.மீ., சுற்றி செல்லாமல் எளிதாக புதிய பஸ் ஸ்டாண்ட் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் விரும்புகின்றனர்.ராஜபாளையம் நகரின் கிழக்கிலிருந்து மேற்கே
மேம்பால பணி நிறைவு பெறும் வரை பாதை தடுப்புகளை அகற்ற எதிர்பார்ப்பு

ராபாளையம் : ராஜபாளையம் மேம்பால பணி நிறைவு பெறும் வரை பி.எஸ்.கே நகரிலிருந்து ஐ.என்.டி.யு.சி நகருக்கு செல்லும் வழியிலுள்ள ரயில்வே, தனியாருக்கு சொந்தமான இடங்களிலுள்ள தடுப்புகளை அகற்றி வாகனங்கள் 4.கி.மீ., சுற்றி செல்லாமல் எளிதாக புதிய பஸ் ஸ்டாண்ட் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் விரும்புகின்றனர்.

ராஜபாளையம் நகரின் கிழக்கிலிருந்து மேற்கே சத்திரப்பட்டி ரோடு செல்வதற்கு தற்போது மலையடிப்பட்டி ரயில்வே கேட் பாதை மட்டும் உள்ளது. மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் பி.எஸ்.கே நகர் அருகே உள்ள ரயில்வே நீர் வழிப்பாதையை சிறிய ரக வாகனங்கள் டூவீலர்கள் உபயோகப்படுத்து வருகின்றனர்.சத்திரப்பட்டி பகுதியில் இருந்து பி.எஸ்.கே நகர் வழியாக ஐ.என்.டி.யு.சி நகரை கடந்து சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள புது பஸ் ஸ்டாண்டை சுலபமாக அடைய முடியும்.இந்நிலையில் ரயில்வே நீர்வழி பாதை அடுத்துள்ள இடத்தில் ரயில்வே துறையினராலும் அதன் அருகில் தனியாராலும் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு கார், ஆட்டோ, லோடு ஆட்டோ உள்ளிட்டவை செல்ல முடியாமல் உள்ளது.

இதனால் ஒரே வழியான மலையடிப்பட்டி ரயில்வே கேட் வரை சென்று 4 கி.மீ., தேவையின்றி சுற்றுவதுடன் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் நெரிசலுக்கு உள்ளாகி வருகின்றன. இதில் ரயில் கடக்கும் நேரங்களில் கேட் அடைப்பதால் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.எனவே இப்பகுதி தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் பாதிப்பை சரி செய்யும் விதமாக ரயில்வே கேட் மேம்பால பணி முடியும் வரையாவது தடைகளை நீக்கி நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும், என்பது அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X