இறந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தை: இறுதிச் சடங்கில் எழுந்ததால் அதிர்ச்சி

Added : ஆக 26, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
வில்லா டி ராமோஸ் : மெக்ஸிகோவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை இறுதிச் சடங்கில் திடீரென எழுந்து சில மணி நேரங்களுக்குப் பின் மீண்டும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவின், வில்லா டி ராமோசைச் சேர்ந்தவர் கமீலா ரொக்ஸானா. இவரது 3 வயது குழந்தைக்கு சமீபத்தில் வயிற்று வலி வாந்தி மற்றும் காய்ச்சல்
மெக்ஸிகோ, குழந்தை இறுதிச் சடங்கு, Mexico, Child Funeral,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வில்லா டி ராமோஸ் : மெக்ஸிகோவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை இறுதிச் சடங்கில் திடீரென எழுந்து சில மணி நேரங்களுக்குப் பின் மீண்டும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவின், வில்லா டி ராமோசைச் சேர்ந்தவர் கமீலா ரொக்ஸானா. இவரது 3 வயது குழந்தைக்கு சமீபத்தில் வயிற்று வலி வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, டாக்டர்கள் குழந்தையை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.ஆனாலும் இரு நாட்களுக்குப் பின் குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


latest tamil news


இதையடுத்து குழந்தையின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. அப்போது குழந்தையின் உடலில் திடீரென அசைவு ஏற்பட்டது. பரிசோதித்ததில் குழந்தைக்கு நாடித்துடிப்பு இருந்துள்ளது. இதையடுத்து குழந்தை உடனடியாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தொடர் சிகிச்சை அளித்தும் சில மணி நேரங்கள் கழித்து குழந்தை உயிரிழந்தது.

சிறுமியின் உயிரிழப்புக்கு பெருமூளை வீக்கமே காரணம் என டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் குழந்தை இறந்துவிட்டதாக முதலில் தவறுதலாக அறிவித்த டாக்டர்கள் மீது குழந்தையின் தாய் வழக்குப் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
27-ஆக-202216:01:59 IST Report Abuse
வாய்மையே வெல்லும் நம்மூரு அரசியல் வியாதிகள் , அனிதா என்கிற கேரக்டர் ஐ அரசியல் லாபத்துக்காக (அதாங்க நீட் எதிர்ப்பு நாடகம் ) அரைவேக்காடு படிப்பு படிச்சு மருத்துவர் ஆனா அம்புட்டு தான் .. அரைகுறை மருத்துவம் பார்த்து நிறைய உயிர் இழப்பு வரும் / வந்திருக்கும்.. நிற்க நீட் தேவையே என இந்த வெளிநாட்டு குழந்தையின் சாவு நமக்கு பாடம் புகட்டுகிறது... நம்மூரு அரசியல் வியாதிகளுக்கு கவலை இல்ல.. ஒரு பக்கம் அரசியல்.. மறுபக்கம் வெளிநாட்டில் இவிங்க ட்ரீட்மெண்ட் நடக்கும்..அம்புட்டு நம்பிக்கை இந்திய டாக்டர்கள் மேலே.. எல்லாம் கிரகம் ....தலையெழுத்து ..
Rate this:
Cancel
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
26-ஆக-202217:22:54 IST Report Abuse
Thalaivar Rasigan யார் வேண்டுமானாலும் டாக்டர் ஆவது முக்கியமல்ல. திறமை இருப்பவர் டாக்டர் ஆகணும். என்ன டாக்டரோ? குழந்தை இறந்துவிட்டது என்று சொல்லிவிட்டதால் அந்த குழந்தைக்கு கொடுக்கவேண்டிய உணவு-குடிநீர் கூட கொடுத்து இருக்க மாட்டார்கள்.
Rate this:
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
26-ஆக-202216:00:29 IST Report Abuse
V Gopalan Now a days the treatment, especially from Middle class to Below poverty line, became a costlier affair. What the Medical Council of India is doing? Will they not make a visits to different hospitals in all the States and get the feedback from patients who underwent surgery and not to speak about the out patients. Consultation charges starts from Rs.500 to Rs.1000-00, will it be possible to afford for any common man? Doctor's appointment will be 10.00 or 11.00 am but doctors will vist by 12.00 pm, till then the patients have to bear the brunt of pain or feel inconveniences. Once the Doctors became somewhat in the line of experts or specialists, they feel that they are not easily accessible, forgetting that their medical expenses are borne by the general public. Especially, the Corporate Hospitals are serving only to the person/s who can be able to meet their lab tests, consultation fee, surgery fee. It is better Dinamalar can bring it to the knowledge of Medical Council of India to make surprise visits and get the feedbak from Patients then the ground reality will be known.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X