உங்களை கவரும் 250 ஸ்டால்களில் இதை வாங்கலாமா, அதை வாங்கலாமா என போட்டி போட்டு வாங்க மெகா ஸ்டால்களுக்குள் நீங்கள் ஓடாத ஓட்டம் ஓடுவீர்கள்.அந்த அளவிற்கு பொருட்கள் பல குவிய போகிறது. சூரிய வெளிச்சத்தை மிஞ்சும் மின் விளக்குகள், எமர்ஜென்சி எக்ஸிட், விசாலமான கார், டூவீலர் பார்க்கிங் ஏரியா என சகல வசதிகளும் தயார்.
பெண்களுக்கு டிரண்டிங் டிசைனர் டிரஸ்
என்ன இளம் பெண்களே இன்று என்ன டிரஸ் அணிந்து 'இன்ஸ்டா'வில்'ரீல்ஸ்' பண்ணி லைக், கமண்ட்ஸ் அள்ளலாம் என யோசிக்கிறீங்களா... கவலையை விடுங்க. இப்பவே கிளம்பி நம்ம கண்காட்சிக்கு வாங்க. இதுவரை நீங்கள் பார்க்காத பல வெளிமாநில, வெளிநாட்டு ரெடிமேட் டிரண்டிங் டிசைனர் ஆடைகள், சாரீஸ், உங்கள் அழகை மெருகேற்றும் பேஷன் ஜூவல்லரி, அழகுசாதன பொருட்கள், காலணிகள், பேன்ஸி பேக், பர்ஸ் என ஒரு நாள் முழுக்க பார்த்து பார்த்து வாங்கலாம். ஆன்லைனில் 'ஷாப்பிங் செய்வதை விட புதிய அனுபவம் பெறலாம். இலவசமா மெகந்தி கூட வரையலாம்.
ஒரே இடத்தில் ஓராயிரம் பொருட்கள்
வீட்டுக்கு தேவையான கிரைண்டர், மிக்ஸி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில், சோபா, ஊஞ்சல், பீரோ, லாக்கர், ஸ்மார்ட் எல்.இ.டி., டிவி, ஸ்மார்ட் போன், அக்சசரீஸ், அழகிய அலங்கார மின் விளக்குகள், ஸ்கிரீன், கொசுவலை, மசாஜ் சாதனங்களை ஒரே இடத்தில் வாங்க இங்கே போகலாமா, அங்கே போகலாமா என்ற குழப்பம் வேண்டாம்...தினமலர் கண்காட்சிக்கு வாங்க ஒரே இடத்தில் உங்கள் லிஸ்ட்டில் இல்லாத ஓராயிரம் புதிய பொருட்கள் கிடைக்கும். ஆட்டோ மொபைல் பிரிவில் கார், டூவீலர்கள், கனவு இல்லம் பிரிவில் கட்டுமான பொருட்களும் இடம்பெறுகிறது. வெளிநாட்டு, வெளிமாநில நிறுவன ஸ்டால்களும் இடம்பெறுகிறது.
புட் கோர்ட்டில் புல் கட்டு கட்டலாம்
கண்காட்சியில் ஓடி, ஆடி, தேடி ஷாப்பிங் பண்ணும் உங்களுக்கு பசிக்குமுல்ல... நீங்கள் ரசித்து, ருசிக்க மட்டன், சிக்கன் பிரியாணி, கோலா உருண்டை, பீட்சா, பர்கர், நண்டு லாலிபாப், பிஷ் பிரை என பார்த்தாலே பரவசமாகி சப்பு கொட்ட வைக்கும் மெகா புட் கோட் இருக்குதுங்கோ... அரங்கில் உள்ள ஸ்டால்களிலும் ரெடி மிக்ஸ் போண்டா, பஜ்ஜி, வடை, புட்டு மாவு, சிப்ஸ், முறுக்கு, அல்வா, ஹோம் மேட் சாக்லேட்டுகள், கிராமத்து மணம் வீசும் 90 கிட்ஸ் மிட்டாய்கள், ஐஸ்கிரீம், குல்பி உட்பட பல உணவுகள் ஐயம் வெயிட்டிங்' என கூறுவது போலவே இருக்கும். புல் கட்டு கட்டலாம் வாங்க.
கிட்ஸ் ஸ்பெஷல் போத்தீஸ் கேம் ஸோன்
கூடவே கூப்பிட்டு வந்தீயே, எனக்கு பொம்மை கிம்மை வாங்கி கொடுத்தியா' என கேட்கும் உங்கள் சுட்டி குழந்தைகள் விளையாடி மகிழ பேட்டரி கார், வாட்டர் போட், சிக்கு புக்கு ரயில், வாட்டர் ரோலிங், ஹேப்பி பன் சிட்டி, கலர் பலுான் சூட்டிங் என கிட்ஸ் ஸ்பெஷல் 'போத்தீஸ் கேம் ஸோன்' கலகலவென கலக்க போகிறது. ஸ்டால்களுக்குள் அறிவு வளர்க்கும் விளையாட்டு பொம்மைகள், புத்தகங்களும் வாங்கலாம். கிளம்பும் போது குழந்தைகளுக்கு கலர்கலரான பலுான்களும் இலவசமாக கிடைக்கும்.கண்காட்சியை இணைந்து வழங்குவோர்: அனிதா ஸ்டோர்ஸ், தேனி ஆனந்தம், அல்ட்ரா பெர்பெக்ட் மேட், நேஷனல் ஜூட் போர்டு, பானோசானிக் முத்து, உட் ஸ்பா பர்னிச்சர்ஸ், இன்டீரியர்ஸ், கோவை லட்சுமி.
டிக்கெட் கொடுக்கும் நேரம்: காலை 11:00 மணி - இரவு 8:00 மணிகண்காட்சி நேரம்: காலை 11:00 மணி - இரவு 8:30 மணிமாநகராட்சி மைதானம் (எம்.ஜி.ஆர்.,பஸ் ஸ்டாண்ட் அருகில்)மாட்டுத்தாவணி, மதுரை,250 ஏ.சி., ஸ்டால்கள்கட்டணம் ரூ.50 (6 வயதுக்கு மேல்)முககவசம் அணிந்து வரவும்