12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

Updated : ஆக 26, 2022 | Added : ஆக 26, 2022 | |
Advertisement
வெள்ளி முதல் வியாழன் வரை (26.8.2022 - 1.9.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன், உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம்சுக்கிரன், சந்திரன் நன்மையை வழங்குவார்கள். நரசிம்மரை வழிபடுங்கள்.அசுவினி: சந்திர பலத்தால் இந்த வாரம் உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். சொத்து விவகாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றிகளை அடைவீர்கள். திடீர்
வாரராசி, ராசிபலன், வாரபலன், பரிகாரம், மேஷம், ரிஷிபம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், கன்னி,  விருச்சிகம்,  தனுசு, மகரம், கும்பம், மீனம்

வெள்ளி முதல் வியாழன் வரை (26.8.2022 - 1.9.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன், உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்சுக்கிரன், சந்திரன் நன்மையை வழங்குவார்கள். நரசிம்மரை வழிபடுங்கள்.

அசுவினி: சந்திர பலத்தால் இந்த வாரம் உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். சொத்து விவகாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றிகளை அடைவீர்கள். திடீர் வரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் அகலும். எதிர்ப்புகள் விலகும்.

பரணி: மனதை வாட்டிய பிரச்னைகள் விலகும். அந்நிய நபர்களின் வழியே உங்கள் வாழ்க்கைக்குரிய வழிகளைக் காண்பீர்கள். துணிச்சலாக செயல்பட்டு செயல்களில் வெற்றி அடைவீர்கள். எதிர்பாலினரிடம் எச்சரிக்கைத் தேவை. புதிய சொத்துகள் வாங்கும் முயற்சி நிறைவேறும்.

கார்த்திகை 1ம் பாதம்: நீங்கள் எண்ணியது நிறைவேறும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். தொழிலில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர்கள். வருமானம் பல வழிகளிலும் வர ஆரம்பிக்கும். குடும்பத்தின் நலனுக்காக செலவுகள் செய்வீர்கள். உறவினர்கள் வழியே சில சங்கடங்கள் உண்டாகும் என்றாலும் உங்கள் அணுகுமுறையால் அதையெல்லாம் சரி செய்வீர்கள்.


ரிஷபம்சுக்கிரன், புதன், கேது நன்மையை வழங்குவார்கள். முன்னோரை வழிபடுங்கள்.


latest tamil news
கார்த்திகை 2, 3, 4: வெள்ளிக் இரவு வரை உங்கள் முயற்சிகள் விறு விறுப்பாக நடந்தேறும். சனிக் முதல் யோசித்து செயல்படுவீர்கள். ஜென்ம செவ்வாயால் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் அதற்குரிய செயலும் மேலோங்கும் என்றாலும் சில தடைகளையும் சந்திப்பீர்கள்.

ரோகிணி: சூரியன் ஆட்சி பெற்றுள்ளதால் உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர்கள். இழுபறியாக இருந்த முயற்சிகளையும் போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளின் திருமண, வேலை வாய்ப்பு முயற்சியில் இறங்குவீர்கள். எதிர்பாராத வருவாய் உண்டாகும்.

மிருகசீரிடம் 1, 2: குடும்பத்தினருடன் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களைத் தேடிவந்து சரணடைவார்கள். எதிர்பாலினரின் நட்பில் எச்சரிக்கையாக இருப்பது நன்மையாகும். ஒரு சிலருக்கு வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.


மிதுனம்சுக்கிரன், சூரியன், ராகு, நன்மைகளை வழங்குவார்கள். சூரிய பகவானை வழிபடுங்கள்.

மிருகசீரிடம் 3, 4: வாரத்தின் முதல்நாள் சுமாராக சென்றாலும் சனி ஞாயிறில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். அந்நியர்களின் ஆதரவால் நினைத்ததை சாதிப்பீர்கள். திங்கள், செவ்வாய்க்களில் உங்கள் முயற்சிக்கேற்ப வெற்றி காண்பீர்கள். புதன் வியாழனில் எதிர்பாராத வரவுகளால் உங்களிடம் உற்சாகம் அதிகரிக்கும்.

திருவாதிரை: கடினமான முயற்சிகளும் எளிதாக வெற்றியாகும். பிள்ளைகளுக்காக செலவுகள் அதிகரிப்பதுடன் சில பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும். தொழிலில் ஏற்றம் இறக்கம் இருந்தாலும் அதை சரி செய்வீர்கள். பூர்வீக சொத்துகளில் பிரச்னைகள் நீடிக்கும்.

புனர்பூசம் 1, 2, 3: மூன்றாமிடத்தில் ஆட்சி பெற்றுள்ள சூரியனால் உங்கள் செல்வாக்கு உயரும். அரசு வழியிலான முயற்சிகள் ஆதாயமாகும். பண வரவில் இருந்த தடைகள் விலகி நீங்கள் எதிர்பார்த்த வரவு வந்து சேரும். செலவுகள் அதிகரித்தாலும் அதை உங்களால் சமாளிக்க முடியும். லாபஸ்தான ராகுவால் எதிர்பாராத ஆதாயம் ஏற்படும்.


கடகம்சுக்கிரன், புதன், செவ்வாய் நன்மைகளை வழங்குவார்கள். முருகனை வழிபடுங்கள்.

புனர்பூசம் 4: ஞாயிறு வரை உங்களின் முயற்சிகளில் தாமதம் ஏற்பட்டாலும் லாப ஸ்தான செவ்வாயால் நினைத்ததை நடத்தி சாதிப்பீர்கள். உங்கள் செயல்களில் வேகம் அதிகரிக்கும். திங்கள் முதல் குடும்ப நலனில் அக்கறை கூடும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் குறையும்.

பூசம்: வார்த்தைகளில் வேகம் இருக்கும். வேலை பளு கூடும். எதிர்பாராத செலவுகள் உண்டானாலும் அதை சமாளிக்கும் வகையில் உங்களின் பொருளாதார நிலை உயரும். உடல்நிலையில் இருந்த சங்கடங்கள் சீராகி ஆரோக்கியமாக நடைபோடுவீர்கள். தொழில், உத்தியோகத்தில் உங்களுடைய விருப்பம் நிறைவேறும். அந்நியர்களால் ஆதாயம் காண்பீர்கள்.

ஆயில்யம்: அந்நியர்களின் துணையுடன் புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள். சனி ஞாயிறுகளில் உங்களின் எண்ணம் ஈடேறும். திங்கள் முதல் உங்கள் வேலைகளில் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாட்டிலிருந்து வேலைக்குரிய தகவல் வரும்.


சிம்மம்சுக்கிரன், கேது நன்மையை வழங்குவார்கள். சனீஸ்வரரை வழிபடுங்கள்.


latest tamil newsமகம்: வெள்ளிக் செலவுகள் அதிகரிக்கும். சனி ஞாயிறில் நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். திங்கள் செவ்வாயில் செயல்களில் நிதானம் தேவை. புதன் முதல் தெளிவாக செயல்பட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். அரசு வகையிலான எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

பூரம்: நெருக்கடிகள் அதிகரித்தாலும் நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். புதிய நண்பர்களால் ஆதாயம், அனுகூலம் என்ற நிலையை அடைவீர்கள் குடும்ப வகையில் செலவுகள் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். புதன் வியாழனில் வரவு அதிகரிக்கும்.

உத்திரம் 1: வாரத்தின் முதல் நாளில் செலவு அதிகரித்தாலும் அதன்பின் வரவுகளை சந்திப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உங்களின் சுய ஆற்றல் வெளிப்படும். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களைத்தேடி வருவார்கள். உடல் நலனில் கூடுதல் கவனம் தேவைப்படும்.


கன்னிசுக்கிரன் நன்மையை வழங்குவார். மகாலட்சுமியை வழிபடுங்கள்.

உத்திரம் 2, 3, 4: வாரத்தின் முதல் நாளில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். சனி ஞாயிறுகளில் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். திங்கள் முதல் உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேர்ந்து நெருக்கடிகளை சரி செய்வீர்கள். பிள்ளையின் திருமண முயற்சியில் ஈடுபடுவதுடன் விருந்து விசேஷங்களுக்கு சென்று வருவீர்கள்.

அஸ்தம்: வெள்ளிக் உங்கள் நீண்ட நாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். வரவு அதிகரிக்கும். தொழில், உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். சனி ஞாயிறில் குடும்பத்தில் சுபச்செலவுகள் உண்டாகும். புதிய இடம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். திங்கள் முதல் திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

சித்திரை 1, 2: வாரத்தின் முதல் நாளில்வெளிவட்டாரத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சனி ஞாயிறில் உங்கள் செயல்பாடுகளால் குடும்பத்தினர் மகிழ்வார்கள். திங்கள் முதல் எதிர்பார்த்தவற்றில் நன்மைகள் ஏற்படும். வரவு அதிகரிக்கும்.


துலாம்சூரியன், புதன் நன்மையை வழங்குவார்கள். வினைகள் தீர்க்கும் விநாயகரை வழிபடுங்கள்.

சித்திரை 3, 4: ஜென்ம கேது ஒரு பக்கம், அஷ்டம செவ்வாய் மறுபக்கம் என்று நிம்மதியற்ற நிலையை அடைந்தாலும் லாப சூரியனால் உங்கள் செயல்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை முறியடித்து நினைத்ததை சாதிப்பீர்கள். ஞாயிறு வரை சந்திர பலத்தால் தடைபட்டிருந்த வருவாய் வரத் தொடங்கும். அதன்பின் செலவுகள் அதிகரிக்கும்.

சுவாதி: சப்தம ஸ்தான ராகுவால் நண்பர்களில் ஒரு சிலர் உங்களுக்குத் தவறான வழி காட்டுவார்கள். சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது உங்களுக்கு நன்மையாகும். இந்த வாரம் பண வரவிற்கு வழி உண்டு. குடும்ப வகையில் செலவுகளும் அதிகரிக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும்.

விசாகம் 1, 2, 3: வாரத்தின் தொடக்கமே உங்கள் நிலையில் முன்னேற்றமாக இருக்கும். தடைபட்டிருந்த முயற்சிகள் வெற்றியடையும். தொழில், உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். தேவைகளை சமாளிக்கும் அளவிற்கு வரவுகள் இருக்கும் என்றாலும் திங்கள் செவ்வாயில் திடீர் செலவுகள் ஏற்படும். புதன் வியாழனில் உங்கள் மனம் விரும்பும் செயல்களில் ஈடுபடுவீர்கள்.


விருச்சிகம்ராகு, சுக்கிரன், சூரியன், புதன் நன்மைகளை வழங்குவார்கள். அம்பிகையை வழிபடுங்கள்.

விசாகம் 4: வெள்ளிக் உங்கள் செயல்களில் தடை தாமதம் என்ற நிலை இருக்கும். அதன்பின் உங்கள் முயற்சிகளில் வெற்றிகளைக் காண்பீர்கள். தொழில் உத்தியோகத்தில் உங்கள் எண்ணம் நிறைவேறும். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் விரும்பிய இட மாற்றம், ஊர் மாற்றம் உண்டாகும். உங்களுடைய செல்வாக்கு உயரும். புதன் மதியத்திற்கு மேல் எதிர்பாராத செலவுகள் தோன்றும்.

அனுஷம்: உங்கள் செல்வாக்கின் காரணமாக எதிரிகள் பின்வாங்குவார்கள். உத்தியோகத்தில் உங்கள் நிலை உயரும். சனிக் முதல் உங்கள் செயல்களில் வேகம் உண்டாகும். பிரபலங்களின் ஆதரவு கிடைத்து உங்கள் நிலையில் முன்னேற்றத்தை அடைவீர்கள். பூர்வீக சொத்துகளில் உண்டான பிரச்னைகள் விலகும். நீங்கள் விரும்பிய ஒன்று உங்கள் கைக்கு வரும்.

கேட்டை: உங்கள் தொழில் ஸ்தானாதிபதியான சூரியன் ஆட்சி பெற்றிருப்பதால் அரசு வழியிலான முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். புதன் பகல் வரை நீங்கள் நினைத்தவற்றில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். பொன் பொருள் வரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும், அதன்பின் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும்.


தனுசுசெவ்வாய், சுக்கிரன், கேது நன்மைகளை வழங்குவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள்.

மூலம்: வெள்ளி இரவு வரையில் உங்களுடைய முயற்சிகளில் தடைகளையும் தேவையற்றப் பிரச்னைகளையும் சந்திப்பீர்கள். மனதில் குழப்பம் அதிகரிக்கும். சனிக் முதல் தெளிவு பிறக்கும். உங்களுடைய அறிவாற்றலால் செயல்களில் வெற்றி அடைவீர்கள். பணத்தடை விலகும். பொருளாதார நிலை உயரும். விரும்பியவற்றை அடைவீர்கள்.

பூராடம்: சனிக் முதல் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். உங்களுடைய ஆரோக்கியம் மேம்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலை உருவாகும். அரசு வழியிலான முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் உண்டான தடைகள் நீங்கும். லாபம் அதிகரிக்கும்.

உத்திராடம் 1: வெள்ளி முழுவதும் செயல்களில் நிதானமும் கவனமும் தேவை. சனிக் முதல் உங்களுடைய முயற்சிகளில் பலிதம் உண்டாகும். எதிர்பார்த்தவற்றில் அனுகூலம் ஏற்படும். புதன் மதியம் முதல் வர வேண்டிய வரவுகள் வந்து சேரும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். லாபம் அதிகரிக்கும்.


சந்திராஷ்டமம்


24.8.2022 காலை 9:03 மணி 26.8.2022 இரவு 8:13 மணி
மகரம்புதன் நன்மையை வழங்குவார். ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.

உத்திராடம் 2, 3, 4: வெள்ளி இரவு வரை உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறும். அதன் பின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் முயற்சிகளில் எச்சரிக்கையும் கவனமும் தேவைப்படும். திங்கள் முதல் நிலை சீராகும். திட்டமிட்டு செயல்படுவதால் முயற்சிகள் வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும்.

திருவோணம்: வாரத்தின் முதல்நாளில் உங்களுடைய முயற்சிகளில் வெற்றிகளைக் காண்பீர்கள். அதன்பின் நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள். தேவையற்ற சங்கடங்களால் மனதில் பயம் தோன்றும். திங்கள் முதல் நிலைமை சீராகும். பிரச்னைகளைக் கண்டறிந்து சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.

அவிட்டம் 1, 2: வாரத்தின் முதல் நாள் மகிழ்ச்சியாக செல்லும். நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சனி, ஞாயிறில் உங்கள் முயற்சிகள் இழுபறியாகும். மற்றவர்களால் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். திங்கள் முதல் உங்களிடம் தெளிவும் வேகமும் உண்டாகும். எதிர்பார்த்ததை அடைவீர்கள்.


சந்திராஷ்டமம்


26.8.2022 இரவு 8:14 மணி 29.8.2022 அதிகாலை 5:38 மணி
கும்பம்ராகு உங்களுக்கு நன்மையை வழங்குவார். அனுமனை வழிபடுங்கள்.

அவிட்டம் 3, 4: ஞாயிற்றுக் வரையில் உங்களுடைய செயல்களில் வெற்றிகளைக் காண்பீர்கள். நினைத்ததை அடைவீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய முயற்சிகள் பலிதமாகும். திங்கள் செவ்வாயில் தடைகளும், எதிர்பார்த்தவற்றில் இழுபறியும் உண்டாகும். புதன் பகலுக்கு மேல் நன்மைகள் தோன்றும்.

சதயம்: வெள்ளி முதல் ஞாயிறு வரை தடைபட்டிருந்த செயல்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கணவன் மனைவி உறவு பலப்படும். திட்டமிட்டு சில செயல்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். திங்கள் முதல் புதன் மதியம் வரை சந்திராஷ்டமம் என்பதால் சங்கடங்கள் தோன்றும் அதன் பின் நிலைமை சீராகும்.

பூரட்டாதி 1, 2, 3: வாரத்தின் முற்பகுதியில் பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் லாபமாகும். தம்பதிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். திங்கள் முதல் புதன் மதியம் வரை எதிர்பாராத சங்கடங்கள் உங்கள் முன் தோன்றும். அதன்பின் நிலைமை மாறும்.


சந்திராஷ்டமம்


29.8.2022 அதிகாலை 5:39 மணி 31.8.2022 மதியம் 12:19 மணி
மீனம்செவ்வாய், சுக்கிரன், சூரியன், புதன் நன்மைகளை வழங்குவார்கள். பிரத்தியங்கிராவை மனதில் எண்ணி செயல்பட சங்கடங்கள் தீரும்.

பூரட்டாதி 4: புதன் மதியம் வரையில் உங்களுடைய முயற்சிகள் எளிதாக நிறைவேறும். அரசு வழியிலான செயல்களில் ஆதாயம் காண்பீர்கள் என்றாலும் வார்த்தைகளில் கவனம் தேவை. உங்கள் வார்த்தைகளே உங்களுக்கு எதிரியாகலாம். புதன் மதியம் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை அவசியம்.

உத்திரட்டாதி: வெள்ளிக் சுமாராகச் சென்றாலும் சனி ஞாயிறுகளில் உங்கள் செயல்கள் வெற்றியாகும். திங்கள் முதல் அரசு வகையில் இருந்த நெருக்கடிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளால் பாராட்டப் படுவார்கள். புதன் மதியம் முதல் எதிர்பாராத நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள்.

ரேவதி: உங்களுடைய புத்திசாலித்தனத்தால் நினைத்ததை சாதிப்பீர்கள். அரசு வழியிலான எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். வாக்கு ஸ்தான ராகுவால் வார்த்தைகளில் எப்போதும் கவனம் தேவை. புதன் மதியத்திற்கு மேல் எதிர்பார்ப்புகள் இழுபறியாகும்.


சந்திராஷ்டமம்


31.8.2022 மதியம் 12:20 மணி - 2.9.2022 மாலை 4:55 மணி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X