மத்திய அரசின் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க இன்று கடைசி

Added : ஆக 26, 2022 | |
Advertisement
தர்மபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் அய்யப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு மத்திய அரசு, PM YASAVI திட்டத்தில் கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இதில் தேர்வு செய்யப்படும், 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு, 75 ஆயிரம் ரூபாயும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு 1.25 லட்சம் ரூபாயும் வழங்கப்படும். பெற்றோர்


தர்மபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் அய்யப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு மத்திய அரசு, PM YASAVI திட்டத்தில் கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இதில் தேர்வு செய்யப்படும், 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு, 75 ஆயிரம் ரூபாயும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு 1.25 லட்சம் ரூபாயும் வழங்கப்படும். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்குள் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில், தமிழகத்தை சேர்ந்த, 1,547 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இத்திட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள், http://yet.nta.ac.gov.in என்ற இணைதள முகவரியில் கடைசி நாளான இன்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் குறைகள் ஏதும் இருந்தால், வரும், 31 வரை திருத்தம் செய்யலாம். வரும், 5 முதல் தேர்வர்களின் ஹால்டிக்கெட் விபரங்களை அறியலாம். கூடுதல் விபரங்களுக்கு, https://scocialjustice.gov.in என்ற இணையதள முகவரியில் அறியலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X