ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 24 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Added : ஆக 26, 2022 | |
Advertisement
கர்நாடகா அணைகளிலிருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால், கர்நாடகாவிலுள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், காவிரியாற்றில் திறக்கப்படும் உபரிநீர் அளவு


கர்நாடகா அணைகளிலிருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால், கர்நாடகாவிலுள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், காவிரியாற்றில் திறக்கப்படும் உபரிநீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று, கபினியிலிருந்து வினாடிக்கு, 4,917 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 19 ஆயிரத்து, 902 கன அடி என மொத்தம், 24 ஆயிரத்து, 873 கன அடி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 6:00 மணிக்கு, 24 ஆயிரம் கன அடியாக அதிகரிகத்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள சினி பால்ஸ், மெயின் பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X