பள்ளி ஆசிரியர் நியமன விவகாரம் மறை மாவட்ட ஆயர் விளக்கம்

Added : ஆக 26, 2022 | |
Advertisement
பர்கூர் அடுத்த எலத்தகிரி கிராமத்தில் அரசு உதவி பெறும் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த, மூன்று மாதங்களுக்கு முன் முதுகலை விலங்கியல் ஆசிரியர் ஓய்வு பெற்றார். அந்த பணியிடத்திற்கு கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 19 வருடங்களாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் அடைக்கலராஜை தேர்வு செய்யாமல், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை


பர்கூர் அடுத்த எலத்தகிரி கிராமத்தில் அரசு உதவி பெறும் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த, மூன்று மாதங்களுக்கு முன் முதுகலை விலங்கியல் ஆசிரியர் ஓய்வு பெற்றார். அந்த பணியிடத்திற்கு கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 19 வருடங்களாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் அடைக்கலராஜை தேர்வு செய்யாமல், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்த அருளானந்தம் என்பவரை பரிந்துரை செய்ததால், எலத்தகிரி மக்கள் பள்ளி வளாகம் முன் அறப்போர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஒருங்கிணைந்த மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
எலத்திகிரி அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் காலியான முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு கல்விக்குழு கூட்டத்தை கூட்டி அடைக்கலராஜ், அருளானந்தம் இருவர் பெயரும் பரிசீலனை செய்யப்பட்டது. இதில், அடைக்கலராஜ் என்பவர், 19 ஆண்டுகள் பட்டதாரி ஆசிரியராக மட்டுமே பணிபுரிந்துள்ளார். அருளானந்தம், 17 ஆண்டுகள் முதுகலை ஆசிரியராக பணிபுரிந்துள்ளதால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரை பணியமர்த்த விடாமல், நிர்வாகத்திற்கு சிலர் அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர். முறைப்படி அருளானந்தத்தை பணியமர்த்த மாவட்ட கலெக்டர், எஸ்.பி., மற்றும் பர்கூர் டி.எஸ்.பி., மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X