ஈரோடு சாயக்கழிவு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தேவை : முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா?

Added : ஆக 26, 2022 | |
Advertisement
'பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால், சாயக்கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதுடன், ஜவுளி சார்ந்த அனைத்து தொழிலும் உயர்வடையும்' என்பதால், முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு தொழில் முனைவோர், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சரளையில் இன்று முதல்வர் ஸ்டாலின் அரசு விழாவில் பங்கேகிறார். இவ்விழாவுக்காக


'பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால், சாயக்கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதுடன், ஜவுளி சார்ந்த அனைத்து தொழிலும் உயர்வடையும்' என்பதால், முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு தொழில் முனைவோர், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சரளையில் இன்று முதல்வர் ஸ்டாலின் அரசு விழாவில் பங்கேகிறார். இவ்விழாவுக்காக ஈரோட்டில் முகாமிட்டுள்ள முதல்வர், இம்மாவட்டத்தின் பிரதான பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என பல்வேறு தரப்பினர்
எதிர்பார்க்கின்றனர்.
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் பொதுச் செயலாளர் ரவிசந்திரன்: ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி சார்ந்த நுால் பதனிடுதல், சாய, சலவை, பிரிண்டிங் ஆலை முதல் ஆயத்த ஆடை உற்பத்தி வரை பல்வேறு தொழில்கள் நடக்கிறது. மாசுகட்டுப்பாட்டு விதிகளை முழுமையாக பின்பற்ற இயலாமல், பெரும் தொகையை செலவிடுகின்றனர். மாசுக்கட்டுப்பாடு, நீர் நிலை பாதுகாப்புக்கான செலவை குறைக்கும் வழிகளை கண்டறிந்து, பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் (சி.இ.டி.பி.,) ஏற்படுத்தி, கழிவு நீருக்கு அரசே கட்டணம் நிர்ணயித்தால், ஜவுளி நுால் உள்ளிட்ட பதனிடுவோர் பயன் பெறுவர். கடந்த, 2007 ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் சுத்திகரிப்பு செய்த நீரை, குழாய் மூலம் ராமநாதபுரம் வழியாக கடலுக்குள் கொண்டு சென்று கலக்கும் திட்டத்தை செயல்படுத்த, 700 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தார்.
அதை அமலாக்க வேண்டும் அல்லது உயர் தொழில் நுட்பத்தில் சாயக்கழிவு வெளியேற்ற பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மத்திய ஜவுளி அமைச்சகம் அறிவித்துள்ள மெகா டெக்ஸ்டைல் பார்க், ஈரோட்டில் ஏற்படுத்த வேண்டும்.
சூரியம்பாளையம் பகுதி குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் கேசவன்: காவிரி ஆறு, காளிங்கராயன், கீழ்
பவானி வாய்க்காலை ஒட்டி அமைந்துள்ள சாய, சலவை, பிரிண்டிங், தோல் ஆலை கழிவுகள், நீர் நிலையில் கலப்பதால், மக்களுக்கு கேன்சர் உட்பட பல்வேறு நோய் ஏற்படுகிறது.
இவற்றை தவிர்க்க சிப்காட் போன்று, குடியிருப்பு, நீர் நிலைகள் இல்லாத பகுதியில் ஆலைகளை இடமாற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக, சூரியம்பாளையம் பகுதியில் உள்ள தோல் ஆலைகளை அகற்றி, வேறு இடமாற்றம் செய்ய வேண்டும். சாய ஆலைகள், தோல் ஆலை கழிவு பிரச்னைக்கு குறைந்த நாளில் தீர்வு காண்பதாக, துணை முதல்வராக ஸ்டாலின் இருந்தபோது ஈரோட்டில் கூறினார்; அதை நிறைவேற்ற
வேண்டும்.
ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி: மஞ்சள் நகரமான ஈரோடு பகுதியில் மஞ்சள் சாகுபடி பரப்பு குறைந்து வருவதை அரசு கவனம் செலுத்தி, குறுகிய கால, தரமான மஞ்சள் உற்பத்தியை ஊக்கப்படுத்த வேண்டும். வெளி மாநிலங்களில்
மஞ்சளை கொள்முதல் செய்யும்போது, அங்கு, 1 சதவீத வரி செலுத்தி, ஈரோடு கொண்டு வந்தால், இங்கும்,1 சதவீத வரி செலுத்த வேண்டி உள்ளது. இதை ரத்து செய்தால் வர்த்தகம் உயரும்.
மத்திய அரசின், 'ஒன் டிஸ்ட்ரிக்ட்; ஒன் கிராப்' திட்டத்தில், முதலீட்டு மானியத்துடன் குளிர்சாதன கிடங்கு அமைத்து, குறைந்த கட்டண மின் இணைப்பு வழங்க வேண்டும். மஞ்சள் அறுவடை, பாலீஷ் செய்ய நவீன இயந்திரம் உருவாக்க வேண்டும். வெளிமாநிலத்தை ஒப்பிடுகையில் மஞ்சள் உற்பத்திக்கு, கூலி, தொழில் நுட்பம், உரம் என அனைத்து செலவும் அதிகம். அதை குறைக்க, 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை பயன்படுத்த அனுமதியும், உயர் தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டும்.
தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன்: கீழ்பவானி வாய்க்காலை நவீனமாக சீரமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், பணிகள் நடக்கவில்லை. ஒவ்வொரு கி.மீ., இடைவெளியிலும் வாய்க்கால் பலம் இழந்துள்ளதால், அரசு ஒதுக்கிய, 710 கோடி ரூபாயில் நவீன சீரமைப்பு பணியை உடன் துவங்க வேண்டும் அல்லது இப்பாசன வாய்க்கால் முடமாகிப்போகும். தொழில் நுட்ப ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் கீழ்பவானி வாய்க்காலை பாதுகாக்க அரசு முன்வர
வேண்டும்.
தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு: ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டத்தில் அதிகமாக மரவள்ளி கிழங்கு சாகுபடியாகிறது. ஈரோடு மாவட்ட மஞ்சள் தேசிய அளவில் பிரபலம் அவற்றை மேம்படுத்த மரவள்ளி கிழங்கு மற்றும் மஞ்சள் பயிருக்கு தனி வாரியம் அமைக்க
வேண்டும்.
பவானிசாகரில் அமைக்கப்பட்டுள்ள மஞ்சள் ஆராய்ச்சி மைய பிரதான அலுவலகத்தை ஈரோட்டில் அமைத்து, விவசாயிகள், வியாபாரிகள் அங்கு சென்று பயன்பெற ஏற்பாடு செய்ய வேண்டும். சத்தியமங்கலம் - பண்ணாரி - திம்பம் மலைப்பாதை வழியாக, வன விலங்குகள் பாதிக்காத வகையில், 24 மணி நேரமும் வாகன போக்குவரத்துக்கான வழியை ஏற்படுத்த வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X