'மாஜி' எம்.எல்.ஏ.,வை கடத்தி ரூ.1.50 கோடி பறிப்பு : அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகி மீது 'பகீர்' புகார்

Added : ஆக 26, 2022 | |
Advertisement
பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வை கடத்தி, 1.50 கோடி ரூபாய் பறித்ததாக, அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகி சரவணன் உள்ளிட்டோர் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி அருகே, புஜங்கனுாரை சேர்ந்தவர் ஈஸ்வரன், 46. அ.தி.மு.க.,வை சேர்ந்த இவர், 2016 முதல், 2021 வரை, பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார். நேற்று காயங்களுடன் சத்தியமங்கலம் அரசு


பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வை கடத்தி, 1.50 கோடி ரூபாய் பறித்ததாக, அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகி சரவணன் உள்ளிட்டோர் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி அருகே, புஜங்கனுாரை சேர்ந்தவர் ஈஸ்வரன், 46. அ.தி.மு.க.,வை சேர்ந்த இவர், 2016 முதல், 2021 வரை, பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார். நேற்று காயங்களுடன் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர்
கூறியதாவது:
கடந்த, 23ம் தேதி மதியம், புஜங்கனுாரில் இருந்து பைக்கில் பவானிசாகர் சென்றேன். திரும்பி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் சாலையில் மல்லியம்பட்டி பிரிவு அருகே வந்தபோது, பைக் பின்புறம், கார் பின் தொடர்ந்து வந்தது. திடீரென பைக்கை வழிமறித்து, காரில் இருந்து இறங்கிய, 6 பேர், கண் மீது துணியை கட்டி மறைத்து காரில் ஏற்றி கடத்திச்சென்றனர். 30 நிமிடத்துக்கு பின், ஒரு வீட்டில் வைத்து, வாயில் துணியை கட்டி அடித்து துன்புறுத்தினர்.
நள்ளிரவுக்கு மேல் சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், நேரு நகரை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகி சரவணன், 3 கோடி ரூபாய் கொடுத்தால் விடுவிப்பதாகவும், இல்லையெனில் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார். அச்சமடைந்த நான், நேற்று காலை, சரவணனை வீட்டுக்கு அழைத்துச்சென்று, 1.50 கோடி ரூபாயை கொடுத்தேன். இதனால், என்னை விட்டுச்சென்றார். கடத்திச்சென்றவர்கள் தாக்கியதில் கால் தொடை, பின்முதுகில் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளது. அதனால், அந்த கும்பல் மீது, புன்செய்புளியம்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ., ஈஸ்வரன், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவர் கொடுத்த புகார் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X