போலீஸ் டைரி - ஈரோடு

Added : ஆக 26, 2022 | |
Advertisement
கல்லுாரி மாணவி மாயம்ஈரோடு: ஈரோடு சூரம்பட்டி வலசு சாஸ்திரி சாலை வெங்கட்ராமன் மகள் காவ்யா, 18. ஈரோடு சி.என். கல்லுாரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 23ம் தேதி காலை கல்லுாரி செல்வதாக கூறி சென்றவர் இரவு, 9:00 மணியாகியும் வீடு திரும்பவில்லை. கல்லுாரி மற்றும் மாலை நேரங்களில் காவ்யா பணியாற்றும் ஈரோடு பழைய பாளையம் கிராப் ஜவுளிகடையில்

கல்லுாரி மாணவி மாயம்
ஈரோடு: ஈரோடு சூரம்பட்டி வலசு சாஸ்திரி சாலை வெங்கட்ராமன் மகள் காவ்யா, 18. ஈரோடு சி.என். கல்லுாரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 23ம் தேதி காலை கல்லுாரி செல்வதாக கூறி சென்றவர் இரவு, 9:00 மணியாகியும் வீடு திரும்பவில்லை. கல்லுாரி மற்றும் மாலை நேரங்களில் காவ்யா பணியாற்றும் ஈரோடு பழைய பாளையம் கிராப் ஜவுளிகடையில் பெற்றோர் விசாரித்தனர். இரு இடங்களுக்கும் காவ்யா வரவில்லை என்பது தெரியவந்தது. எனவே வீட்டை விட்டு சென்ற மகளை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்று வெங்கட்ராமன், ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
பாம்பு கடித்து மூதாட்டி பலி
கோபி:கோபி அருகே கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் கண்ணம்மாள், 60. இவரை நேற்று முன்தினம், அதிகாலை, 3:00 மணிக்கு விஷபாம்பு கடித்தது. சிகிச்சை பலனின்றி பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கண்ணம்மாள் நேற்று இறந்தார். கண்ணம்மாளின் மகள் தங்கமணி, 40, அளித்த புகார்படி, பங்களாப்புதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பள்ளி மாணவி தற்கொலை
கோபி: கோபி அருகே பூச்சி மருந்தை குடித்து, பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கோபி அருகே கொங்கர்பாளையத்தை சேர்ந்த ராமசாமி மகள் கோபிகா, 15. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அடிக்கடி வயிற்று வலியால், கோபிகா அவதிப்பட்டார். இந்நிலையில், கடந்த, 18ம் தேதி இரவு, 9:00 மணிக்கு, பூச்சி மருந்தை சாப்பிட்டு, வீட்டில் கோபிகா வாந்தி எடுத்தார். சிகிச்சை பலனின்றி பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கோபிகா நேற்று இறந்தார். இதுகுறித்து கோபிகாவின் தந்தை ராமசாமி அளித்த புகாரின்படி, பங்களாப்புதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X