நடத்தையில் சந்தேகம் மனைவியை குத்தி கொன்ற கணவர்

Added : ஆக 26, 2022 | |
Advertisement
நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, மனைவியை, கணவர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கரூர் தான்தோன்றிமலை, என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்த சத்யா, 40. இவரது கணவர் செல்வராஜ், 52. சத்யா கட்டட வேலைக்கு சென்று வருவதால், அவர் மீது செல்வராஜூக்கு சந்தேகம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு, 8.00 மணிக்கு கட்டட வேலைக்கு சென்று விட்டு,

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, மனைவியை, கணவர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் தான்தோன்றிமலை, என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்த சத்யா, 40. இவரது கணவர் செல்வ
ராஜ், 52. சத்யா கட்டட வேலைக்கு சென்று வருவதால், அவர் மீது செல்வராஜூக்கு சந்தேகம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு, 8.00 மணிக்கு கட்டட வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்த
போது, சத்யாவிடம், சண்டை போட்டுள்ளார். அப்போது, வீட்டில் காய்கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியால், சத்யாவின் வயிற்றில் குத்தி உள்ளார்.
பின், வீடு அருகில் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் தன் மூத்த மகனிடம் சென்று அம்மாவை கத்தியால் குத்தி விட்டேன், மருத்துவ
மனைக்கு கூட்டி செல் என கூறி விட்டு தலை
மறைவாகிவிட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் சத்யா உயிரிழந்தார். தான்தோன்றிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்வராஜை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X