குறுகலான அணுகுசாலையால் சிக்கல் வாகனங்கள் கடந்து செல்வதில் சிரமம்

Added : ஆக 26, 2022 | |
Advertisement
குறுகலான அணுகுசாலை இருப்பதால் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் கடந்து செல்ல காலதாமதம் ஆகிறது.கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ்புறம் அணுகுசாலை உள்ளது. இந்த சாலை வழியாக கரூர் நகருக்குள் வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக திருப்பூர், ஈரோடு, கோவை, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும்


குறுகலான அணுகுசாலை இருப்பதால் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் கடந்து செல்ல காலதாமதம் ஆகிறது.
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ்புறம் அணுகுசாலை உள்ளது. இந்த சாலை வழியாக கரூர் நகருக்குள் வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக திருப்பூர், ஈரோடு, கோவை, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் மேம்பாலத்திற்கு கீழே உள்ள அணுகுசாலை வழியாக வந்து செல்கிறது.
இங்குள்ள, ரவுண்டானா அணுகு சாலையில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. சிக்னல் குறைந்தது 4 நிமிடம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை, மாலை வேளைகளில் வாகனங்கள் அணிவகுத்து நீண்ட வரிசையில் நிற்கின்றன. அதேபோல சிக்னல் கிடைத்ததும் அனைத்து வாகனங்களும், குறுகலான சாலையில் செல்ல முடிவதில்லை. நெரிசலில் ஊர்ந்து செல்வதற்குள் மீண்டும் ரெட் சிக்னல் விழுந்து விடுகிறது.
சாலை குறுகலாக இருப்பதே இந்த நெரிசலுக்கான காரணமாகும். வெளி மாவட்டங்களில் இருந்து கரூர் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்லும் பஸ்கள் நெருக்கடியில் இருந்து வந்து திரும்புவதற்கே, அரைமணி நேரத்துக்கு மேல் ஆகி விடுகிறது. இதனால் பயண துாரம் மேலும் அரைமணிநேரம் கூடுதலாகிறது. எனவே, சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X