மரத்தை வளைத்து போட்ட சாலை அகற்றம்

Added : ஆக 26, 2022 | |
Advertisement
அரசியல் காழ்ப்புணர்ச்சியால், கரூரில் நன்கு வளர்ந்து வரும் மரத்தை சுற்றி வளைத்து, சாலை போட்டது குறித்து நமது நாளிதழ் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, அந்த மரத்தை சுற்றி மட்டும் சாலை அகற்றப்பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தில், மாவட்டம் நிர்வாகம் மற்றும் எம்.ஆர்.வி டிரஸ்ட் சார்பில் கானகத்திற்குள் கரூர் என்ற திட்டத்தில் மர கன்றுகள் நடப்பட்டன. இதில், கரூர் மாநகராட்சி

அரசியல் காழ்ப்புணர்ச்சியால், கரூரில் நன்கு வளர்ந்து வரும் மரத்தை சுற்றி வளைத்து, சாலை போட்டது குறித்து நமது நாளிதழ் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, அந்த மரத்தை சுற்றி மட்டும் சாலை அகற்றப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில், மாவட்டம் நிர்வாகம் மற்றும்
எம்.ஆர்.வி டிரஸ்ட் சார்பில் கானகத்திற்குள் கரூர் என்ற திட்டத்தில் மர கன்று
கள் நடப்பட்டன. இதில், கரூர் மாநகராட்சி பகுதி
களில் மட்டும், 7,000த்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு முன், நெடுஞ்சாலை துறை சார்பில், கரூர் கோவை சாலையில் ஒப்பந்ததாரர் உள்நோக்கத்தில் நன்கு வளர்ந்து வரும் மரத்தை சுற்றி வளைத்து தார் சாலை போடப்பட்டதால், அவை பட்டு போகும் அபாயத்தில் உள்ளது குறித்து நேற்று நமது நாளிதழில் செய்தி வெளியானது.
அதை தொடர்ந்து நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் மேற்பார்வையில் பொக்லைன் இயந்திரம் மூலம் மரங்களில் வேர் பகுதியில் இருந்து தார் கலவை அகற்றப்பட்டது. மேலும், மரங்களுக்கு தண்ணீர் ஊற்ற ஏதுவாக குழியும் தோண்டப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X