அரசியல் கட்சியினர் தள்ளுமுள்ளு மீன்பிடி ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு

Added : ஆக 26, 2022 | |
Advertisement
இடைப்பாடி, வெள்ளரிவெள்ளியில், 51.56 ஏக்கரில் ஏரி உள்ளது. அந்த ஏரிக்கு காவிரி ஆற்றின் கிழக்கு கரை வாய்க்கால் மூலம் தண்ணீர் வருவதால், ஆண்டு முழுதும் தண்ணீர் இருக்கும். அதனால், ஏரியில் மீன் பிடிக்கும் குத்தகையை எடுக்க, போட்டி நிலவுகிறது. அதற்கான ஏலம் நேற்று இடைப்பாடி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. பி.டி.ஓ., ரவிச்சந்திரன் முன்னிலையில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளை


இடைப்பாடி, வெள்ளரிவெள்ளியில், 51.56 ஏக்கரில் ஏரி உள்ளது. அந்த ஏரிக்கு காவிரி ஆற்றின் கிழக்கு கரை வாய்க்கால் மூலம் தண்ணீர் வருவதால், ஆண்டு முழுதும் தண்ணீர் இருக்கும்.
அதனால், ஏரியில் மீன் பிடிக்கும் குத்தகையை எடுக்க, போட்டி நிலவுகிறது.
அதற்கான ஏலம் நேற்று இடைப்பாடி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. பி.டி.ஓ., ரவிச்சந்திரன் முன்னிலையில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள், 3 கோஷ்டிகளாக திரண்டு, தங்களுக்கு தான் குத்தகைக்கு விட வேண்டும் என கூச்சலிட்டனர்.
தொடர்ந்து, அரசியல் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், குத்தகை ஏலத்தை, பி.டி.ஓ., தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். கடந்த, 19ல் நடந்த ஏலமும், இதேபோல் ஒத்திவைக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X