ரயிலில் போதைப்பொருள் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Added : ஆக 26, 2022 | |
Advertisement
மதுரை : போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் இதுவரை 6 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளோம்,'' என ரயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி., வனிதா கூறினார்.மதுரையில் ரயில்வே போலீசில் பணியாற்றுபவர்களுக்கு வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது தொடர்பான கலந்துரையாடல் நடந்தது.இதில் கலந்து கொண்ட ஏ.டி.ஜி.பி., வனிதா நிருபர்களிடம் கூறியதாவது:ஆப்ரேஷன் கஞ்சா' மூலம்




மதுரை : போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் இதுவரை 6 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளோம்,'' என ரயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி., வனிதா கூறினார்.

மதுரையில் ரயில்வே போலீசில் பணியாற்றுபவர்களுக்கு வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது தொடர்பான கலந்துரையாடல் நடந்தது.இதில் கலந்து கொண்ட ஏ.டி.ஜி.பி., வனிதா நிருபர்களிடம் கூறியதாவது:
ஆப்ரேஷன் கஞ்சா' மூலம் கஞ்சா கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திரா, ஒடிசாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1000 கிலோ, 88 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.ரயில்வே போலீஸ் மூலம் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் இதுவரை 6 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளோம். கடத்தலில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்.
ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க ரயில்வே பாதுகாப்புப்படை, ரயில்வே காவல்துறையுடன் இணைந்து வேலைப்பளுவை குறைத்து வருகிறோம். மனமகிழ்ச்சியுடன் போலீசார் பணியில் ஈடுபட ஆலோசனை வழங்க பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் பெண் போலீசாருக்கும், பெண் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.சென்னையில் 'ரூட்டுதலை' என்ற பெயரில் கல்லுாரி மாணவர்கள் ரயில்வே ஸ்டேஷனில் ஆயுதங்களை வைத்து மிரட்டினர். அவர்களில் 27 பேர் கைது செய்யப்பட்டனர். மாணவர்களிடையே ஆயுத கலாச்சாரத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X