லஞ்ச வழக்கில் 2 ஆண்டு சிறை

Added : ஆக 26, 2022 | |
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கடந்த 2006, ஜன., 12ம் தேதி, காங்கயம் தெற்கு மின்வாரிய அலுவலகத்திலிருந்து மின் கட்டண வீதம் (டேரிப்) மாற்றுவதற்காக விண்ணப்பித்தார். இதற்காக, மின்வாரிய உதவி பொறியாளர் சக்திவேல், 52 என்பவர், 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.இதுகுறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் கிருஷ்ணமூர்த்தி புகார்



திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கடந்த 2006, ஜன., 12ம் தேதி, காங்கயம் தெற்கு மின்வாரிய அலுவலகத்திலிருந்து மின் கட்டண வீதம் (டேரிப்) மாற்றுவதற்காக விண்ணப்பித்தார். இதற்காக, மின்வாரிய உதவி பொறியாளர் சக்திவேல், 52 என்பவர், 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.இதுகுறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்தார். போலீசார் அறிவுரைப்படி லஞ்ச தொகையை கிருஷ்ணமூர்த்தி கொடுத்தபோது, மறைந்திருத்த போலீசார் சக்திவேலை கையும், களவுமாக பிடித்தனர்.இந்த வழக்கு விசாரணை திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடந்துவந்தது. நேற்று, சக்திவேலுக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி புகழேந்தி தீர்ப்பு அளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X