மன்னார் வளைகுடா படகு இல்லம்: 200 ரூபாயில் கடல் பயணம்

Updated : ஆக 26, 2022 | Added : ஆக 26, 2022 | |
Advertisement
வார விடுமுறை நாட்கள் தூக்கத்திலும், வழக்கமான பணிகளோடும் சலிப்பாக செல்கின்றதா? அதனை உற்சாகமான, மறக்கமுடியாத நாளாக மாற்ற ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகே உள்ள மன்னார் வளைகுடா படகு இல்லத்திற்கு வண்டி ஏறுங்கள். கடலில் பயணித்து மணல் திட்டுக்களில் இறங்கி, கால்களை உரசும் பவளப்பாறைகளையும், நான்குபுறமும் பிரமிக்க வைக்கும் கடலை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.கடல்
Gulf_of_mannar, Boat_house, Weekend_Travel, Tour, Tamilnadu_Tourism, Best_places_in_Tamilnadu

வார விடுமுறை நாட்கள் தூக்கத்திலும், வழக்கமான பணிகளோடும் சலிப்பாக செல்கின்றதா? அதனை உற்சாகமான, மறக்கமுடியாத நாளாக மாற்ற ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகே உள்ள மன்னார் வளைகுடா படகு இல்லத்திற்கு வண்டி ஏறுங்கள். கடலில் பயணித்து மணல் திட்டுக்களில் இறங்கி, கால்களை உரசும் பவளப்பாறைகளையும், நான்குபுறமும் பிரமிக்க வைக்கும் கடலை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

கடல் பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். அதிலும் அரியவகை பவளப்பாறைகள், அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் நேரடியாக தெரியக்கூடிய மன்னார் வளைகுடா கடலுக்குள் சென்று நேரில் பார்ப்பது இன்னும் ஆச்சர்யம் . இந்தியப் பெருங்கடலில் குமரியிலிருந்து, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களை ஓட்டிய கடல் பகுதியை மன்னார் வளைகுடா என்கின்றனர். வளைகுடா என்றால் நிலப்பரப்பை ஊடுருவி காணப்படும் கடல் என்கின்றனர்.


latest tamil news


இந்தியாவின் முக்கியப் பவளப்பாறைகள் உள்ள பகுதிகளில் மன்னார் வளைகுடா முதன்மையானது. இதனை விட்டால் அந்தமான் தீவுகள், லட்சத்தீவு, குஜராத்தின் கட்ச் வளைகுடாவில் தான் இவை காணக்கிடைக்கும். தூத்துக்குடியிலிருந்து ராமேஸ்வரம் வரையிலான 10 ஆயிரம் சதுர கிலோமீட்டர் மன்னார் வளைகுடா கடல் பகுதி இத்தகைய வளமிக்கது. இதனை உயிர்க்கோளக் காப்பகமாக பாதுகாக்கின்றனர்.


latest tamil news


Advertisement

சமீபத்தில் புதிதாக 6 ஈரநிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் கிடைத்தது. அவற்றில் மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க்கோளக் காப்பகமும் ஒன்று. மேலும் தனுஷ்கோடியை சுற்றி 560 சதுரகிலோ மீட்டரில் பரந்து விரிந்து பல தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய பகுதி தான் இந்தியாவின் முதல் கடல்வள தேசியப் பூங்காவாகும்.

பவளப்பாறைகள் விசேஷ சூழலில் தான் உருவாகும். ஒருவகை உயிரினங்கள் ஒன்று சேர்ந்து கற்பாறைகள் மீது ஒட்டிக்கொண்டு கால்சியம் கார்பனேட் ஆக மாறுவதால் பவளப்பாறைகள் உருவாகின்றன. இதற்கு கடலின் வெப்பநிலை 24 டிகிரி செல்சியசிற்குள் இருக்க வேண்டும். சூரிய ஒளி கடலின் ஆழம் வரை நன்கு ஊடுருவ வேண்டும். அலைகள் குறைவாக இருக்க வேண்டும். இத்தகைய சூழல் நிலவுவதால் தான் ராமநாதபுரம் கடல் பகுதிகளில் பவளப்பாறைகள் மிகுந்து காணப்படுகின்றன. இவை கடல் உயிரினங்கள் வளர புகலிடமாக உள்ளன.


latest tamil news


அப்படி ஒரு பகுதி தான் ஏர்வாடி அருகே உள்ள பிச்சை மூப்பன் வலசை கிராமம். இங்கு வனத்துறை சூழலியல் மையம் என்ற பெயரில் படகு சவாரி ஏற்பாடு செய்து சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது. இங்கிருந்து கடலில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை அழைத்துச் சென்று, சுற்றி இயற்கையாக அமைந்துள்ள மணல் திட்டுகளில் சிறிது, சிறிது நேரம் இறங்கி காலார நடக்க அனுமதிக்கின்றனர்.


latest tamil news


நான்கு புறமும் கடலின் எழில்மிகு இயற்கை காட்சிகளை ரசிக்கலாம். உலகிடமிருந்து துண்டித்துக் கொண்டு வந்த உணர்வை அது வழங்கும். இங்கு 7 அடி முதல் 9 அடி ஆழத்தில் வகை வகையான பவளப்பாறைகள் நிறைய உள்ளன. வனத்துறை அழைத்துச் செல்லும் படகிலேயே கீழே கண்ணாடி பொருத்தப்பட்டிருப்பதால் அதன் வழியேவும் அரிய கடல் உயிரினங்களையும், பவளப்பாறைகளையும் காணலாம்.அந்தமானில் ரூ.2,000 நம்மூரில் வெறும் ரூ.200latest tamil news


பவளப்பாறைகள் உள்ள கடலுக்கு செல்ல அந்தமான் பகுதியில் ஒரு மணிநேரத்திற்கு ரூ.2,000 வரை வசூலிக்கப்படுகிறது. ஆனால் பிச்சை மூப்பன் வலசையில் வனத்துறையின் படகு இல்லத்தில் ஒரு நபருக்கு ரூ.2,00 மட்டுமே கட்டணம். நவீன என்ஜின் பொருத்தப்பட்ட இப்படகுகள் மேற்கூரையுடன் உள்ளன. பயணிகளுக்கு லைப் ஜாக்கெட் தந்து அழைத்துச் செல்கின்றனர். இதனால் வெயில், மழையால் பிரச்னையில்லை. காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். செவ்வாயன்று விடுமுறை. ஆர்டரின் பேரில் அங்குள்ள கேன்டீனில் மீன் உணவுகள் கிடைக்கும். இல்லையெனில் ஏர்வாடியிலேயே உணவை முடித்துக்கொண்டு செல்லலாம்.

கூகுள் மேப் லோகேஷன்: https://maps.app.goo.gl/2DkyCqmCNhzFaPth9


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X