அனுமதி பெறாத கோழிப் பண்ணைகள் நடவடிக்கை எடுக்க தீர்ப்பாயம் உத்தரவு

Added : ஆக 26, 2022 | |
Advertisement
சென்னை:மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாத, கோழிப் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், ஆரியகவுண்டம்பட்டியை சேர்ந்த பிரபா என்பவர், 2020-ல், பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், 'சரஸ்வதி வேலப்பன் என்பவர் நடத்தி வரும் கோழிப் பண்ணையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாலும், கழிவுகளாலும்,

சென்னை:மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாத, கோழிப் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ஆரியகவுண்டம்பட்டியை சேர்ந்த பிரபா என்பவர், 2020-ல், பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், 'சரஸ்வதி வேலப்பன் என்பவர் நடத்தி வரும் கோழிப் பண்ணையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாலும், கழிவுகளாலும், அப்பகுதியில் வசிப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோழிப் பண்ணைக்காக அதிக அளவு நிலத்தடி நீரை உறிஞ்சுவதால், அப்பகுதியில் உள்ள கிணறுகளில், நீர்மட்டம் குறைந்துள்ளது. எனவே, கோழிப் பண்ணையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த, பசுமை தீர்ப்பாய நீதிபதி கே.ராமகிருஷ்ணன், நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:
மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெறாமலும், அதன் உத்தரவுகளை மீறும் வகையிலும் கோழிப் பண்ணை நடத்துவது, சட்டத்தை மீறுவதாகும். சரஸ்வதி வேலப்பன், தான் நடத்தும் கோழிப் பண்ணைக்கு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற வேண்டும். அதுவரை கோழிப் பண்ணையை இயக்கக் கூடாது. கோழிப் பண்ணையை சுற்றி வேலிகள் அமைப்பது, கொட்டகைகள் அமைப்பது போன்ற குறைகளை சரி செய்ய வேண்டும்.
பண்ணையை சுற்றி மரங்களை நட்டு, பசுமை பரப்பை உருவாக்க வேண்டும் என, கூட்டுக்குழு பரிந்துரைத்திருந்தது. ஆனால், அதிக அளவில் மரங்கள் இருந்தால், கோழிகளுக்கு நோய்த் தொற்று ஏற்படும் என, பண்ணை உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எந்த அளவுக்கு பசுமை பரப்பை உருவாக்கலாம் என்பது குறித்தும், பசுமை பரப்பே கூடாது என்றால் அதற்கான வழிகாட்டுதல்களையும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆறு மாதங்களுக்குள் வழங்க வேண்டும்.
கால்நடைத் துறையுடன் இணைந்து, இதற்கான மாற்று வழிமுறைகளை, மாநில மாசு கட்டுப் பாட்டுவாரியம் உருவாக்கலாம்.அதிக அளவு நிலத்தடி நீரை உறிஞ்சும் மாவட்டமாக, நாமக்கல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கோழிப் பண்ணைக்காக கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவை கணக்கிட வேண்டும். ஆரியகவுண்டம்பட்டி கோழிப் பண்ணை உட்பட, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலை பெறாத கோழிப் பண்ணைகள் மீது, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X