உ.பி., பா.ஜ., தலைவராக பூபேந்திர சவுத்ரி நியமனம்| Dinamalar

உ.பி., பா.ஜ., தலைவராக பூபேந்திர சவுத்ரி நியமனம்

Added : ஆக 26, 2022 | |
லக்னோ:உத்தர பிரதேசத்தில், மாநில பா.ஜ.,வின் புதிய தலைவராக அமைச்சர் பூபேந்திர சவுத்ரி, 54, நியமிக்கப்பட்டுள்ளார். உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அரசியல் ரீதியாக செல்வாக்குமிக்க ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவரும், அமைச்சருமான பூபேந்திர சவுத்ரி, மாநில பா.ஜ., தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.வரும், 2024 லோக்சபா தேர்தலை குறிவைத்தும், மூன்று

லக்னோ:உத்தர பிரதேசத்தில், மாநில பா.ஜ.,வின் புதிய தலைவராக அமைச்சர் பூபேந்திர சவுத்ரி, 54, நியமிக்கப்பட்டுள்ளார்.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அரசியல் ரீதியாக செல்வாக்குமிக்க ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவரும், அமைச்சருமான பூபேந்திர சவுத்ரி, மாநில பா.ஜ., தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


வரும், 2024 லோக்சபா தேர்தலை குறிவைத்தும், மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து டில்லியில் விவசாய சங்கங்கள் நடத்திய போராட்டத்தில் முன்னணியில் நின்ற ஜாட் சமூகத்தை தங்கள் பக்கம் ஈர்க்கவும் இந்த நியமனம் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது.


இந்நிலையில் லோக்சபா தேர்தல் குறித்து சவுத்ரி கூறுகையில், ''வரும் 2024 லோக்சபா தேர்தலில் உ.பி.,யில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதை இலக்காக நிர்ணயித்துள்ளோம். இதற்காக, அனைவரையும் அரவணைத்துச் செல்வேன்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X