'ஆண்டுக்கு 10 ஆயிரம் புதிய தொழில் முனைவோர்':அமைச்சர் அன்பரசன் தகவல்

Added : ஆக 26, 2022 | |
Advertisement
அவிநாசி:''குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் வாயிலாக, ஆண்டுக்கு, 10 ஆயிரம் புதிய தொழில்முனைவோரை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் அன்பரசன் கூறினார்.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற தலைப்பில், மண்டல மாநாடு திருப்பூரில் நடந்தது. இதில் குறு, சிறு

அவிநாசி:''குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் வாயிலாக, ஆண்டுக்கு, 10 ஆயிரம் புதிய தொழில்முனைவோரை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் அன்பரசன் கூறினார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற தலைப்பில், மண்டல மாநாடு திருப்பூரில் நடந்தது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:
தமிழகத்தில், 10 லட்சத்து, 94 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., கொரோனா பாதிப்பில் இருந்து குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை மீட்டெடுக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுந்தரதேவன் தலைமையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டு, பரிந்துரைகள் பெறப்பட்டன.
கடன் உத்தரவாதத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளதால், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு, 90 சதவீதம் கடன் உத்தரவாதம் வழங்கப்படும். எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின், மூன்று சுய வேலை வாய்ப்பு திட்டம் வாயிலாக, ஆண்டுக்கு, 10 ஆயிரம் புதிய தொழில் முனைவோரை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இதுவரை, 313.33 கோடி ரூபாய் மானியத்தில், 1,283 கோடி ரூபாய் வங்கிக்கடன் உதவியுடன், 10 ஆயிரத்து 716 படித்த இளைஞர்கள் புதிய தொழில் முனைவோராக மாறியுள்ளனர். வரும் 2030ல், 79 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் பொருளாதார இலக்கை எட்ட, அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X