திண்டுக்கல் கூட்டுகுடிநீர் திட்டம்அமைச்சர் அறிவிப்பால் குழப்பம்

Added : ஆக 26, 2022 | |
Advertisement
சென்னை:திண்டுக்கல் மாவட்டத்திற்கான ஆழியாறு கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக, மின்துறை அமைச்சர் தெரிவித்த கருத்தால், புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி, ஒட்டன்சத்திரம், பழனி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில், ஆழியாறு கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அரசு

சென்னை:திண்டுக்கல் மாவட்டத்திற்கான ஆழியாறு கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக, மின்துறை அமைச்சர் தெரிவித்த கருத்தால், புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி, ஒட்டன்சத்திரம், பழனி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில், ஆழியாறு கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.இதுகுறித்த அறிவிப்பை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, 2021 ஆக., 25ல் அறிவித்தார். இதற்கு 630 கோடி ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை நிறைவேற்றிக் காட்டுவேன் என, ஏப்., 24ல், திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசு உத்தரவு மே 9ல் வெளியிடப்பட்டது.ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என, கோவை மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்; சமீபத்தில் பேரணி நடத்தினர். அதையும் மீறி, திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்ததாரர் தேர்வை, குடிநீர் வாரியம் துவக்கிஉள்ளது.
கோவையில், நடந்த நிகழ்ச்சியில் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 'மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது. எனவே, ஆழியாறு திட்டம் தொடர்பாக முதல்வர் சிறந்த முடிவை உறுதியாக எடுப்பார்' எனக் கூறினார்.இதனால், ஆழியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பான தெளிவான அறிவிப்பை, அரசு வெளியிட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X