வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நொய்டா : நொய்டாவில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட பிரமாண்ட இரட்டை கோபுரங்களை வரும் 28-ம் தேதியன்று வெடி பொருள் வைத்து தகர்க்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார்.
இதில் நொய்டா மாவட்ட நிர்வாகம் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் போது முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
![]()
|
இந்த இடிப்பால், 55 ஆயிரம் டன் கட்டட இடிபாடு குப்பை குவியும். இவற்றை அகற்ற, மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும். கட்டட இடிப்பின் போது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில், கட்டட கழிவுகளை உடனுக்கு உடன் அகற்றவும், 3 கி.மீ. தொலைவிற்கு பொது மக்கள் நடமாட்டம் வாகன போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சரியாக, ஆக. 28-ம் தேதி பிற்பகல் 2:30க்கு கட்டடம் இடிக்கப்படும்; 9 வினாடிகளில் ஒட்டுமொத்த கட்டடமும் இடிந்து விழுந்து விடும். ஒட்டுமொத்த இடிப்பு பணிகளுக்கும், 20 கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement