வேலை வாய்ப்பு அலுவலகத்தில் முன்னுரிமைதாரர்கள் பதியலாம்

Added : ஆக 26, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:'வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தகுதி வாய்ந்த முன்னுரிமை தாரர்கள் பதிவு செய்யலாம்' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி அறிக்கை:தமிழ் வழியில் படித்தவர்கள்; முதல் பட்டதாரி; கொரோனா வால் பெற்றோரை இழந்த இளைஞர் ஆகியோருக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க அரசாணை வழங்கப்பட்டு உள்ளது.எனவே, முன்னுரிமை பெற விரும்பும் வேலை

காஞ்சிபுரம்:'வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தகுதி வாய்ந்த முன்னுரிமை தாரர்கள் பதிவு செய்யலாம்' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி அறிக்கை:தமிழ் வழியில் படித்தவர்கள்; முதல் பட்டதாரி; கொரோனா வால் பெற்றோரை இழந்த இளைஞர் ஆகியோருக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க அரசாணை வழங்கப்பட்டு உள்ளது.

எனவே, முன்னுரிமை பெற விரும்பும் வேலை வாய்ப்பு பதிவுதாரர்கள், தமிழ் வழி படித்த சான்று அந்தந்த தலைமை ஆசிரியர்கள் இடம் பெற வேண்டும். முதல் தலைமுறை பட்டதாரி மற்றும் கொரோனா தொற்றால், பெற்றோரை இழந்தவர்கள் வருவாய் துறை அலுவல ரிடம் சான்றிதழ் பெற்று, வேலை வாய்ப்பு அலுவல கத்தில், முன்னுரிமை பட்டியலில் பதிவு செய்து பயன் பெறலாம். மேலும், கூடுதல் விபரங்களுக்கு, 044 - -27237124 காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X