குட்கா பாக்கெட் விற்ற 6 கடைகளுக்கு அபராதம்

Added : ஆக 26, 2022 | |
Advertisement
ஆனைமலை:ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், சுகாதாரத்துறையினர் கடைகளில் ரெய்டு நடத்தி, குட்கா விற்பனை செய்த, ஆறு கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர்.தமிழகம் முழுவதிலும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க, அரசு துறைகள் இணைந்து கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால், குடோன்களில் பதுக்கி வைப்பதும், கடைகளில் விற்பனை செய்வதும் தொடர்கதையாக
குட்கா பாக்கெட் விற்ற 6 கடைகளுக்கு அபராதம்

ஆனைமலை:ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், சுகாதாரத்துறையினர் கடைகளில் ரெய்டு நடத்தி, குட்கா விற்பனை செய்த, ஆறு கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர்.தமிழகம் முழுவதிலும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க, அரசு துறைகள் இணைந்து கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால், குடோன்களில் பதுக்கி வைப்பதும், கடைகளில் விற்பனை செய்வதும் தொடர்கதையாக உள்ளது.இந்நிலையில், ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதுார் பகுதியில், சுகாதாரத்துறையினர் கடைகளில் நேற்று திடீர் ரெய்டு நடத்தினர்.
சுகாதார மேற்பார்வையாளர் செல்லத்துரை, ஆய்வாளர்கள் அருணாச்சலம், நந்தா மற்றும் ரகுநாத் ஆகியோர், கடைகளில் ஆய்வில் ஈடுபட்டனர்.தடை செய்யப்பட்ட, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, ஆறு கடைகளுக்கு தலா, 200 ரூபாய் வீதம் அபராதம் விதித்தனர்.கடைக்காரர்கள் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததால், அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்ததுடன், கடைகளின் விபரங்கள் குறித்து, ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், பள்ளிகள் அருகிலும், பஸ் ஸ்டாப் பகுதிகளிலும், பல கடைகளில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை தடுக்க, போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர், ஒருங்கிணைந்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X